T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை நாளை வெளியீடு.. நேரடி ஒளிபரப்பை எங்கு காணலாம்?
ICC T20 World Cup 2026 Schedule: கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2026 Schedule) தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய மண்ணில் நடைபெறவுள்ளதால் நடப்பு சாம்பியனான இந்திய அணி (Indian Cricket team) சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துகொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கும். இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணை விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், நாளை அதாவது 2025 நவம்பர் 25 டி20 உலகக் கோப்பை தொடர்பாக ரசிகர்கள் நேரடி ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ளலாம். முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழ்நாடு பூர்வீகம்.. இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து சம்பவம்.. யார் இந்த செனுரன் முத்துசாமி?




போட்டி அட்டவணை எப்போது வெளியாகிறது..? எங்கு காணலாம்..?
ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நாளை அதாவது 2025 நவம்பர் 25ம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணையை ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம். மேலும், இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் நட்சத்திரங்களான முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த நிகழ்வுக்கான அட்டவணையை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை வெளியீட்டை எங்கு காணலாம்..?
A schedule reveal like never before! 😍
Join us with @ImRo45, @Angelo69Mathews, @surya_14kumar, & @ImHarmanpreet
for the grand unveiling of the ICC #T20WorldCup 2026 fixtures! 🔥 pic.twitter.com/1uDUiGAuMV— Star Sports (@StarSportsIndia) November 24, 2025
2026 டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீட்டை ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 இந்தி ஆகிய சேனல்களில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை வெளியிடும் நேரம்:
2026 டி20 உலகக் கோப்பை அட்டவணையானது நாளை அதாவது 2025 நவம்பர் 25ம் தேதி இந்திய நேரப்படி (IST) மாலை 6:30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது.
2026 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன..?
இந்தியா (நடப்பு சாம்பியன்ஸ்), இலங்கை (இந்தியாவுடன் போட்டியை நடத்தும் நாடு), பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து.
ALSO READ: கேப்டனாக கே.எல்.ராகுல்.. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இதுவரை அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது..?
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இரண்டு முறை, தொடக்க மற்றும் கடைசிப் பதிப்பு என இதுவரை 2 முறை வென்றுள்ளது. அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் இதுவரை இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன.