Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025: 2025ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்த அணியா..?

Most Matches Win in 2025: 2025ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், பாகிஸ்தானை விட இந்தியா குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளது. பாகிஸ்தான் 56 போட்டிகளில் 30 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தியா 45 போட்டிகளில் 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Year Ender 2025: 2025ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்த அணியா..?
2025ல் அதிக வெற்றியை பதிவு செய்த அணிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Dec 2025 08:19 AM IST

2025ம் ஆண்டு முடிவடைய உள்ளது. எனவே, 2025ம் ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியலை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். இந்தியாவும் (Indian Cricket Team), பாகிஸ்தானும் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. இதில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நடுவே நியூசிலாந்து 2025ல் அதிக போட்டிகளில் வென்றது. அதேநேரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் 2வது இடத்தை பிடித்தன. அதன்படி, டெஸ்ட் (Test Cricket), ஒருநாள் மற்றும் டி20 உட்பட 2025ம் ஆண்டு அதிக போட்டிகளில் வென்ற முதல் 5 அணிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டி20 உலகக் கோப்பை முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!

நியூசிலாந்து நம்பர் 1:

2025ம் ஆண்டில் நியூசிலாந்து அணி அதிக போட்டிகளில் வெற்றிபெற்று, 33 வெற்றிகளை பெற்றுள்ளது. அதாவது, மொத்தம் 47 போட்டிகளில் விளையாடி, 9 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இதற்கிடையில், ஒரு போட்டி முடிவடையாமலும், மற்ற 4 போட்டிகள் டிடாவிலும் முடிந்தது. 2025ம் ஆண்டில் நியூசிலாந்து அணி 4 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் வென்றது.

2வது இடத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும்..


2025ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், பாகிஸ்தானை விட இந்தியா குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளது. பாகிஸ்தான் 56 போட்டிகளில் 30 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தியா 45 போட்டிகளில் 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 ஆசிய கோப்பைகளை வென்றிருந்தது.

3வது இடத்தில் ஆஸ்திரேலியா:

2025ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி 23 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2025ம் ஆண்டில் ஆஸ்திரேலியா இதுவரை 38 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய அணியின் கடைசி தோல்வி ஆஷஸில் இங்கிலாந்து எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அமைந்தது.

ALSO READ: 2025ல் கிரிக்கெட்டில் கலக்கிய தருணங்கள்.. படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்..!

5வது இடத்தில் இரு அணிகள்:

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களிலும் தலா 21 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா 5வது இடத்தில் உள்ளன. 2025ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா 43 போட்டிகளில் விளையாடி 21 போட்டிகளில் வெற்றியும், 22 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது. அதேநேரத்தில், வங்கதேச அணி 47 போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியையும், 21 போட்டிகளில் வெற்றியையும் பதிவு செய்தது.