WPL 2026: நாளை முதல் மகளிர் பிரீமியர் லீக்.. எப்போது யார் மோதுகிறார்கள்? முழு அட்டவணை இதோ!
WPL 2026 Full Schedule: மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் கட்டம் வருகின்ற 2026 ஜனவரி 9 முதல் 2026 ஜனவரி 17 வரை நவி மும்பையில் நடைபெறும். இரண்டாம் கட்டம் வருகின்ற 2026 ஜனவரி 19 முதல் வருகின்ற 2026 பிப்ரவரி 5 வரை வதோதராவில் இறுதிப்போட்டியுடன் முடிவடையும். லீக் கட்டத்தில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும்.
மகளிர் பிரீமியர் லீக் 2026 (WPL 2026) நாளை அதாவது 2026 ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது. இந்த புதிய சீசனின் முதல் போட்டி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நவி மும்பையில் மோதுகின்றன. 2025 மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை, மகளிர் பிரீமியர் லீக்கின் மூன்று சீசன்கள் நடந்துள்ளன. அதில், மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை பட்டத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி ஒரு முறை பட்டத்தையும் வென்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மூன்று சீசன்களிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. மகளிர் பிரீமியர் லீக் நான்காவது சீசனுக்கான அட்டவணையைப் பார்ப்போம்.
ALSO READ: மகளிர் பிரீமியர் லீக் போட்டி டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
எப்போது தொடங்கி எப்போது முடிகிறது..?
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் கட்டம் வருகின்ற 2026 ஜனவரி 9 முதல் 2026 ஜனவரி 17 வரை நவி மும்பையில் நடைபெறும். இரண்டாம் கட்டம் வருகின்ற 2026 ஜனவரி 19 முதல் வருகின்ற 2026 பிப்ரவரி 5 வரை வதோதராவில் இறுதிப்போட்டியுடன் முடிவடையும். லீக் கட்டத்தில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும். இதன் பிறகு, எலிமினேட்டர் 2026 பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும், இறுதிப் போட்டி இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2026 பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்.




WPL 2026ன் முழு அட்டவணை:
- 2026 ஜனவரி 9, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், நவி மும்பை
- 2026 ஜனவரி 10, UP வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 10, மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 11, டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 12, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs யுபி வாரியர்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 13, மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 14, UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 15: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 16, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 17, யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், நவி மும்பை
- 2026 ஜனவரி 17, டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், நவி மும்பை
- 2026 ஜனவரி 19, குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வதோதரா
- 2026 ஜனவரி 20, டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வதோதரா
- 2026 ஜனவரி 22, குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ், வதோதரா
- 2026 ஜனவரி 24, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ், வதோதரா
- 2026 ஜனவரி 26, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், வதோதரா
- 2026 ஜனவரி 27, குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வதோதரா
- 2026 ஜனவரி 29, யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வதோதரா
- 2026 ஜனவரி 30, குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வதோதரா
- 2026 பிப்ரவரி 1, டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ், வதோதரா
- 2026 பிப்ரவரி 3, எலிமினேட்டர், வதோதரா
- 2026 பிப்ரவரி 5, இறுதிப் போட்டி, வதோதரா