Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Smriti Mandhana Records: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்.. டி20யில் அதிக சிக்ஸர்கள்.. மிரட்டும் ஸ்மிருதி மந்தனா!

Indian Women Cricket Team: 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைத்தார். இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 சர்வதேச போட்டியில் ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

Smriti Mandhana Records: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்.. டி20யில் அதிக சிக்ஸர்கள்.. மிரட்டும் ஸ்மிருதி மந்தனா!
ஸ்மிருதி மந்தனாImage Source: BCCI Womens/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Dec 2025 19:15 PM IST

நேற்று அதாவது 2025 டிசம்பர் 28ம் தேதி இலங்கைக்கு எதிரான 4வது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 10,000 சர்வதேச ரன்களை நிறைவு செய்தார். மகளிர் கிரிக்கெட்டில் வேகமாக 10,000 ரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) பெற்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த 2வது இந்திய மற்றும் உலகின் 4வது மகளிர் வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். 10,000 சர்வதேச ரன்களை அடித்த முதல் இந்திய மகளிர் கிரிக்கெட் (Indian Womens Cricket team) வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார்.

ALSO READ: ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி

குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்:

இந்திய மகளிர் வீராங்கனை ஸ்மிருது மந்தனா தனது 281வது சர்வதேச இன்னிங்ஸில் 10,000 ரன்களை எட்டினார். இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமான ரன் எண்ணிக்கையாகும். இதன்மூலம் மிதாலி ராஜ், சுசி பேட்ஸ் மற்றும் சார்லோட் எட்வர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்களின் சாதனையையும் முறியடித்தார். இதே சாதனையை மிதாலி ரான் தனது 291 வது இன்னிங்ஸிலும், சார்போட் 308வது இன்னிங்ஸிலும், சுசி பேட்ஸ் 314 இன்னிங்ஸிலும் 10,000 ரன்களையும் கடந்திருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் தனது பெயரில் 10,868 ரன்கள் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற பட்டியலில் இன்னும் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர்கள்:

10,000 ரன்கள் மைல்கல்லை எட்டியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைத்தார். இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 சர்வதேச போட்டியில் ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில், 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்த மூன்று சிக்ஸர்களுடன், அதிக சிக்ஸர்கள் அடித்த ஹர்மன்ப்ரீத் கவுரின் (78) சாதனையையும் மந்தனா முறியடித்தார்.

ALSO READ: நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி எப்போது அறிவிக்கப்படும்? கிடைத்த முக்கிய அப்டேட்!

ஸ்மிருதி மந்தனா இப்போது டி20 சர்வதேச போட்டிகளில் 80 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதுவும் ஸ்மிருதி வெறும் 157 போட்டிகளில் 151 இன்னிங்ஸ்களில் இந்த சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்ததில் ஷஃபாலி வர்மாவும் புது இடத்தை எட்டியுள்ளார். 94 போட்டிகளில் 93 இன்னிங்ஸ்களில் 69 சிக்ஸர்களுடன், அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பெண்கள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.