ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி
IndWvsSLW: திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை மகளிர் அணி படுதோல்வி அடைந்தது. இலங்கை மகளிர் அணிக்கு 222 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிராக முதல் மூன்று டி20 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 4வது நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்து, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அதிக ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை (Sri Lanka) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் இந்திய தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இலங்கை பந்துவீச்சை நான்கு புறமும் சிதறடித்தனர்.
கடைசி 10 ஓவர்களில் 136 ரன்களைக் குவித்த இந்தியா
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வெர்மா இருவரும் இணைந்து பவர் ப்ளே ஓவர்களிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 6 ஓவர்களில் இந்தியா 61 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் இந்திய அணியின் ஸ்கோர் 85 ரன்களைக் குவித்திருந்தது.




இதையும் படிக்க : Indian Cricket Team in 2026: டி20 உலகக் கோப்பை முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!
30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
4TH WT20I. India (Women) Won by 30 Run(s) https://t.co/9lrjb3dMqU #TeamIndia #INDvSL #4thT20I @IDFCfirstbank
— BCCI Women (@BCCIWomen) December 28, 2025
இந்த நிலையில் 10 ஓவர்களுக்கு பிறகு இந்திய பேட்டிங் வேகம் மேலும் அதிகரித்தது. அடுத்த 10 ஓவர்களில் மட்டும் 136 ரன்கள் குவிக்கப்பட்டது. ஷஃபாலி வர்மா 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஸ்மிருதி மந்தனா 34 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். இருவரும் இணைந்து 162 ரன்கள் ஓப்பனிங்கில் சேர்த்தனர். இந்த கூட்டணி, மகளிர் டி20 கிரிக்கெட்டில் மந்தனா – ஷஃபாலி ஜோடி 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்த 4வது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், ஷஃபாலி வர்மா 79 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய வீரர்களின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் என்ற சாதனையை மந்தனா படைத்தார். இதற்கு முன் இந்த சாதனை ஷஃபாலி வர்மாவிடம் இருந்தது. இதில் ஹைலைட்டாக கடந்த போட்டியிலும் ஷஃபாலி 79 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையும் படிக்க : AUS vs ENG 4th Test: 14 ஆண்டுகள் காத்திருப்பு.. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
இலங்கை பந்துவீச்சு தோல்வி
இலங்கை அணியின் பந்துவீச்சு இந்தப் போட்டியில் சொதப்பலாக அமைந்தது. அந்த அணியின் மல்ஷா ஷஹானி தவிர, மற்ற எந்த பந்துவீச்சாளருக்கும் 10-க்கு குறைவான எகானமி ரேட் இல்லை. குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் 136 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிரணி 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சாமரி அத்தப்பட்டு 52 ரன்கள் குவித்தார்.