Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ravi Shastri: இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? மெக்கலம் நீக்கமா?

England’s Head Coach: ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2018-19 மற்றும் 2020-21ம் ஆண்டுகளில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றனர். இரண்டு முறையும் தொடர் 2-1 என்ற கணக்கில் வென்றது.

Ravi Shastri: இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? மெக்கலம் நீக்கமா?
ரவி சாஸ்திரி - பிரண்டன் மெக்கலம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Dec 2025 20:57 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு (England vs Australia) இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதன் காரணமாக, இங்கிலாந்து ரசிகர்கள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் மீது கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், இங்கிலாந்து அணிக்கு புதிய மனநிலை தேவை என்றும், பிரெண்டன் மெக்கலத்திற்கு (Ravi Shastri) பதிலாக முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை கொண்டு வரலாம் என்றும், ஆஸ்திரேலியாவில் தொடரை எப்படி வெல்வது என்பது ரவி சாஸ்திரிக்குத் தெரியும் என்று கூறினார்.

ALSO READ: 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா கோலி..? பயிற்சியாளர் கொடுத்த ஸ்வீட் அப்டேட்!

ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்..


இங்கிலாந்து அணி ஏற்கனவே 2025-26 ஆஷஸ் தொடரை இழந்தது. முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், ரவி சாஸ்திரியை இங்கிலாந்தின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுகுறித்து கூறுகையில், ”ஆஸ்திரேலியாவை வீழ்த்த சரியான வழி யாருக்குத் தெரியும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்? ஆஸ்திரேலியாவின் மன, உடல் மற்றும் ஆலோசனை பலவீனங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள்? ரவி சாஸ்திரி இங்கிலாந்தின் அடுத்த தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று பனேசர் கூறினார்.

பேட்ஜ்பால் யுத்தி தோல்வியா..?

ஆக்ரோஷமான அணுகுமுறைக்காக பாராட்டுகளைப் பெற்ற மெக்கல்லமின் “பேட்ஜ்பால்” உத்தி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இங்கிலாந்து அணி சரிவை சந்தித்தது. கடந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இங்கிலாந்து அணி 12 டெஸ்ட் போட்டிகளில் வென்றது. ஆனால், 13 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இது மெக்கல்லமின் முறைகளின் நிலைத்தன்மை மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சிறந்த அணிகளுக்கு எதிராக அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆஸ்திரேலியாவில் அசத்திய ரவி சாஸ்திரி பயிற்சி:

ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2018-19 மற்றும் 2020-21ம் ஆண்டுகளில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றனர். இரண்டு முறையும் தொடர் 2-1 என்ற கணக்கில் வென்றது.

ALSO READ: போக்சோ வழக்கில் சிக்கிய வீரர்.. விரைவில் கைதா..? ஆர்சிபி அணிக்கு ரூ. 5 கோடி நஷ்டமா?

தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மெக்கல்லம் விலகுவாரா?

இங்கிலாந்து தலைமை பயிற்சியாளராக தனது எதிர்காலம் குறித்து பேசிய பிரெண்டன் மெக்கல்லம், “எனக்குத் தெரியாது. அது உண்மையில் என்னுடையது முடிவு அல்ல, நான் என் வேலையைத் தொடர்ந்து செய்யப் போகிறேன். நாங்கள் இங்கு சிறப்பாகச் செய்யாத விஷயங்களிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். மேலும் சில முன்னேற்றங்களைச் செய்ய முயற்சிக்கிறேன். அவை எனக்கான கேள்விகள் அல்ல, அவை வேறு ஒருவருக்கானவை” என்று கூறினார்.