2027 ODI World Cup: 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா கோலி..? பயிற்சியாளர் கொடுத்த ஸ்வீட் அப்டேட்!
Virat Kohli: டெல்லி அணி 299 ரன்கள் என்ற இலக்கை வெறும் 38 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து கலக்கினார் விராட் கோலி.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி (Virat Kohli) டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று அதாவது 2025 டிசம்பர் 24ம் தேதி விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy) விராட் கோலி ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் 131 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக, டெல்லி அணி 299 ரன்கள் என்ற இலக்கை வெறும் 38 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து கலக்கினார் விராட் கோலி.
ALSO READ: ரன் மெஷினாக திகழும் கோலி, ரோஹித்.. விஜய் ஹசாராவில் சதம் அடித்து கலக்கல்..!




2027 ஒருநாள் உலகக் கோப்பையில் கோலி விளையாடுவாரா?
#WATCH | Rajkot, Gujarat | On Virat Kohli’s return to the Vijay Hazare Trophy for Delhi and scoring a century against Andhra Pradesh, Virat Kohli’s childhood coach Rajkumar Sharma says, “He is in brilliant form. He batted very well and ensured Delhi’s victory. He played domestic… pic.twitter.com/XXkY1nsaBr
— ANI (@ANI) December 24, 2025
விராட் கோலி சிறந்த ஃபார்மில் இருந்தபோதிலும், ஒரு கேள்வி தொடர்ந்து எழுந்தும் எழுப்பப்பட்டு வருகிறது. அது விராட் கோலி 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பதுதான். இந்தநிலையில், விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஏ.என்.ஐக்கு கோலியின் எதிர்காலம் குறித்து பேட்டியளித்தார். அதில், ”2027 உலகக் கோப்பையில் விளையாட விராட் முழுமையாகத் தயாராக இருக்கிறார்” என்றார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ”விராட் கோலி சிறந்த ஃபார்மில் இருக்கிறார். சிறப்பாக பேட்டிங் செய்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு கோலி உள்நாட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பினாலும் சிறப்பாக செயல்பட்டார். தற்போது இந்திய அணியில் மிகவும் நிலையான வீரராக ரன்களை குவித்து வருகிறார். எனவே, 2027 உலகக் கோப்பையில் விளையாட முழுமையாகத் தயாராக உள்ளார்” என்றார்.
லிஸ்ட் ஏ-வில் 16,000 ரன்களை கடந்த கோலி:
விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி சதம் அடித்தார். இது அவரது லிஸ்ட் ஏ கிரிக்கெட் வாழ்க்கையில் 58வது சதமாகும். இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக அவரது ஐந்தாவது சதமாகும். இதே போட்டியில், விராட் தனது லிஸ்ட் ஏ கிரிக்கெட் வாழ்க்கையில் 16,000 ரன்களையும் பூர்த்தி செய்தார். விராட் இப்போது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 330 இன்னிங்ஸ்களில் 16,130 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக இந்த வடிவத்தில் 21,999 ரன்களை எடுத்துள்ளார்.
ALSO READ: சூடுபிடித்த முதல் நாள்.. விஜய் ஹசாரே டிராபியில் படைக்கப்பட்ட டாப் 5 ரெக்கார்ட்ஸ்..!
விராட் கோலியின் அடுத்த போட்டி எப்போது..?
வருகின்ற 2025 டிசம்பர் 26ம் தேதியான நாளை விஜய் ஹசாரே டிராபியில் விராட் கோலி தனது அடுத்த போட்டியில் விளையாடுவார் . ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் டெல்லி அணி குஜராத் அணியை எதிர்கொள்ளும். டெல்லி vs குஜராத் போட்டி இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு தொடங்கும்.