Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli: ராஞ்சியில் அதிரடி சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமா? விராட் கோலி விளக்கம்!

Virat Kohli Test Returns: விராட் கோலியின் சதத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்,  சமீபத்தில் ஓய்வு பெற்ற அனுபவ வீரரான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தற்காலிகமாகத் திரும்புமாறு பிசிசிஐ வேண்டுகோள் விடுக்கலாம் என்று கூறப்பட்டது.

Virat Kohli: ராஞ்சியில் அதிரடி சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமா? விராட் கோலி விளக்கம்!
விராட் கோலிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Dec 2025 18:31 PM IST

ராஞ்சியில் நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa 1st ODI) இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபார சதம் அடித்து, கிரிக்கெட்டில் ’நான் தான் கிங்’ என்று மீண்டும் நிரூபித்தார். இந்த போட்டியில் விராட் கோலி (Virat Kohli) அதிரடியாக விளையாடி 135 ரன்கள் குவித்தார். இதனால். இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவியது. விராட் கோலியின் சதத்திற்கு பிறகு, மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து கோலியிடம் கேட்டபோது அவர் சொன்ன தகவல் சற்று வருத்தப்படுத்தியது. அதன்படி,அனைத்து ஊகங்கள் மற்றும் தகவல்களுக்கு மத்தியில், விராட் கோலி ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவேன் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ALSO READ: சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய உலக சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்

ஆட்ட நாயகனாக தேர்வு:

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒரு மாதத்திற்குப் பிறகு விராட் கோலி மீண்டும் களமிறங்கி அற்புதமான இன்னிங்ஸை விளையாடி, ஒருநாள் போட்டிகளில் தனது  52வது சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி வெறும் 120 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உட்பட 135 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இதன் காரணமாக, விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்த தகவல்கள்:


விராட் கோலியின் சதத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்,  சமீபத்தில் ஓய்வு பெற்ற அனுபவ வீரரான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தற்காலிகமாகத் திரும்புமாறு பிசிசிஐ வேண்டுகோள் விடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், விராட் கோலியிடம் பிசிசிஐ அணுகியதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.இதன் விளைவாக, இந்த பிரச்சினை நேற்றைய நாள் முழுவதும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது சாத்தியமா என்று கேள்விப்பட்டது.

ALSO READ: ஒருநாள் வரலாற்றில் முதல் முறை.. ரன்களை வாரிவழங்கிய இந்திய பவுலர்கள்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா கோலி..?

ராஞ்சி ஒருநாள் போட்டிக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு விராட் கோலியிடம் ஹர்ஷா போக்ளே கேள்வி எழுப்பினார். அப்போது ஹர்ஷா போக்ளே, ”நீங்கள் தற்போது ஒரு வடிவத்தில் மட்டுமே கிரிக்கெட்டை விளையாடுகிறீர்கள். இது பின் வரும் நாட்களிலும் இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விராட் கோலி, “இது எப்போதும் இப்படித்தான் இருக்கும். நான் ஒரே வடிவிலான கிரிக்கெட்டை மட்டுமே விளையாட போகிறேன். மனம் கூர்மையாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை, விளையாட்டு எளிதாக இருக்கும்”என்றார்.