AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SA: சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய உலக சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்

Virat Kohli Sets Record : விராட் கோலி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 102 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என சதம் அடித்த அவர், சச்சினின் சாதனையை முறியடித்தார்.

IND vs SA: சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய உலக சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்
விராட் கோலி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Nov 2025 17:38 PM IST

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா (South Africa) ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரன் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின் ரோகித் சர்மா – விராட் கோலி (Virat Kohli) ஜோடி தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.   இந்த நிலையில் இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உலக சாதனை படைத்தனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி

விராட் கோலி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 102 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என சதம் அடித்த அவர், சச்சினின் சாதனையை முறியடித்தார். இதனையடுத்து உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதையும் படிக்க : IND vs SA: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா..? மோர்னே மோர்கல் பதில்..!

அவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் 51 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவருக்கு அடுத்து 3வது இடத்தில் ஜாக்ஸ் காலிஸ் 45 டெஸ்ட் சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 41 டெஸ்ட் சதங்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலியின் சதம் குறித்து பிசிசிஐ பதிவு

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மற்ற இளம் வீரர்கள் திணறிய நிலையில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். இந்த நிலையில் ரோகித் சர்மா ஜேன்சன் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழக்க, தொடர்ந்து விராட் கோலி அதிரடியாக விளையாடி சதமடித்தார். 120 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் என 134 ரன்களை எடுத்து ரியான் ரிக்கல்டன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையும் படிக்க : IND vs SA Series: முதல் போட்டியிலேயே வரலாறு படைக்கும் ரோஹித்-கோலி ஜோடி.. எப்படி தெரியுமா?

இந்த நிலையில் கடைசி கட்டத்தில் கே.எல்.ராகுல் அரை சதம் அடிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்கள் குவித்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறவிருக்கிறது.

 

Follow Us