WPL 2026: இன்னும் சில தினங்களில் WPL.. போட்டியை எப்போது? எங்கு நேரடியாக காணலாம்?
WPL 2026 Live Free Streaming: WPL 2026 போட்டியில் UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய ஆறு அணிகள் இடையே 22 போட்டிகள் நடைபெறும். இதன் இறுதிப் போட்டியானது வருகின்ற 2025 பிப்ரவரி 5ம் தேதி வதோதராவில் நடைபெறும்.
மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) 4வது சீசன் வருகின்ற 2026 ஜனவரி 9ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் 6 அணிகள் கடுமையாக போட்டியிட்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். உலக கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் லாரா வால்வார்ட் போன்றோர் கலந்து கொள்வதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. WPL 2026 போட்டியில் UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய ஆறு அணிகள் இடையே 22 போட்டிகள் நடைபெறும். இதன் இறுதிப் போட்டியானது வருகின்ற 2025 பிப்ரவரி 5ம் தேதி வதோதராவில் நடைபெறும். அதன்படி, இதன் அனைத்து போட்டிகளும் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடைபெறும்.
ALSO READ: மகளிர் பிரீமியர் லீக் போட்டி டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
நேரடி ஒளிபரப்பு எங்கே நடைபெறும்?
நீங்கள் மகளிர் பிரீமியர் லீக் 2026 நேரடி ஒளிபரப்பைப் பார்க்க விரும்புவோர்,அனைத்து போட்டிகளையும் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக காணலாம். ஹாட்ஸ்டார் பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இது மட்டுமின்றி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும்.




இலவசமாக எங்கே பார்ப்பது?
மகளிர் பிரீமியர் லீக் 2026 ஐ இலவசமாகப் பார்க்க விரும்புவோருக்கு, சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் ப்ளான் தேவைப்படும். அதன்படி, குரூப் ஸ்டேஜ் முதல் முதல் இறுதிப் போட்டி வரையிலான போட்டிகளை இலவசமாக கண்டுகளிக்கலாம்.
போட்டிகள் எத்தனை மணிக்குத் தொடங்கும்?
WPL 2026 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும். டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மாலை 7 மணிக்கு நடைபெறும். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு 15 நிமிட இடைவேளை இருக்கும். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும். திட்டமிட்டபடி போட்டி இரவு 11 மணிக்கு முடிவடையும்.
அதிக கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ்:
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும். இந்த பட்டியலில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் ஒரு முறை பட்டத்தை வென்றுள்ளது. மற்ற அணிகள் இன்னும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.