AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தோல்விக்கு மத்தியிலும் உலக சாதனை – ஒரே ஆண்டில் 400 சிக்சர்கள் விளாசி வரலாறு படைத்த இந்தியா!

India Creates T20I History : நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தாலும், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

தோல்விக்கு மத்தியிலும் உலக சாதனை  – ஒரே ஆண்டில் 400 சிக்சர்கள் விளாசி வரலாறு படைத்த இந்தியா!
இந்திய அணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Nov 2026 22:19 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தாலும், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) மற்றும் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் முக்கியமான சாதனைகளைப் படைத்துள்ளனர்.

நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் 2026 நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இதையும் படிக்க : IPL 2027: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ்..? ஹர்திக் எதிர்காலம் என்ன..?

இஷான் கிஷன் 61 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 191 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபர்ட் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

டிம் செய்ஃபர்ட் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரே ஆண்டில் 400 சிக்சர்கள் அடித்து இந்திய அணி உலக சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தோல்வியடைந்தாலும், இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதன்படி, ஒரு காலண்டர் ஆண்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டில் இந்திய அணி மொத்தம் 40 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 400 சிக்சர்களை விளாசியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் மொத்தம் 11 சிக்சர்களை அடித்தனர். இதன் மூலம் ஒரே ஆண்டில் 400 சிக்சர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய அணி எட்டியுள்ளது. குறிப்பாக, இந்தப் போட்டியில் இஷான் கிஷன் 5 சிக்சர்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 சிக்சர்களையும் விளாசினர். மேலும், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் திர் ஆகியோர் தலா ஒரு சிக்சர் அடித்தனர்.

இதையும் படிக்க : WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி.. முதலிடத்தை இழந்து 3வது இடத்திற்கு சரிந்த ஆஸ்திரேலியா!

இந்த நிலையில் இந்திய அணியின் 400வது சிக்சரை நமன் திர் விளாசியுள்ளார். நியூசிலாந்து வீரர் பிளேர் டிக்னர் வீசிய 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் நமன் திர் சிக்சர் அடித்தார். இதுவே 2026ஆம் ஆண்டில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் விளாசிய 400வது சிக்சராகப் பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் எட்டாத புதிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

Follow Us