AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி நேர பணப்புழக்கம்.. தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

Anti Corruption Police Raid Sub Registrar Offices : தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .

தீபாவளி நேர பணப்புழக்கம்.. தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Nov 2026 17:06 PM IST

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அந்தந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதிக அளவிலான பணப்புழக்கம் இருக்கும் என்பதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், சென்னையில் அசோக் நகர், அண்ணா நகர், குன்றத்தூர், பம்மல், பெரியமேடு, நீலாங்கரை உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டாய தீபாவளி வசூல்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகம் பத்திரப்பதிவு அதிகளவு மேற்கொள்ளப்படும் நிலையில், தீபாவளி வசூல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை

அதன் அடிப்படையில், தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வரும் பொது உங்களிடம் தீபாவளி பரிசு, இனாம் என்ற பெயரில் கட்டாய வசூல் நடப்பதாக புகார் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வராத பணம் எவ்வளவு பறிமுதல்

இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத எவ்வளவு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது என்பது தொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் படிக்க: ரூ.5 கோடி பேரம் பேசிய விவகாரம்.. சிக்குகிறாரா அமைச்சர் ராஜ்மோகன்? லஞ்ச ஒழிப்பு துறையில் பரபர புகார்!

Follow Us