AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் ஜீவாவின் தங்கபுள்ள பாடல் வீடியோ!

Thangapulla Video Song From Thagappan Movie | நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் தகப்பன். அந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான தங்கபுள்ள என்ற பாடல் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் ஜீவாவின் தங்கபுள்ள பாடல் வீடியோ!
தகப்பன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Nov 2026 18:12 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு உருவாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஜீவாவின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் தம்பி தலைவர் தலைமையில் படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ஜாலியா இருந்த ஒருத்தன் மற்றும் தகப்பன் (Thagappan) என இரண்டு படங்களும் உருவாகி வருகின்றது.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தகப்பன் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான தங்கபுள்ள பாடல் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் ஜீவாவின் தங்கபுள்ள பாடல் வீடியோ:

இந்த தகப்படன் படத்தை இயக்குநர் ரா. வெங்கட் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து உள்ள இந்த தகப்பன் படத்தில் நடிகர் ரெஜிஷா விஜயன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் தங்கபுள்ள என்ற பாடல் வீடியோ வெளியானது. அந்தப் பாடல் தற்போது யூடியூபில் இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jithu Madhavan: சீன் பட கதை குறித்து ஆன்லைனில் பரவும் கருத்து.. நச் பதில் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன்!

தகப்பன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா… 21 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் சிவகாசி படம்!

Follow Us