AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த ஆண்டு தீபாவளி போனசில் இவற்றை செய்ய மறக்காதீர்கள்.. என்ன என்ன?

Diwali Bonus Investment Tips | இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்காக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான போனஸ் பணத்தை முறையாக செலவு செய்வது எப்படி, அதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு தீபாவளி போனசில் இவற்றை செய்ய மறக்காதீர்கள்.. என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Nov 2026 01:35 AM IST

இந்தியர்களுக்கு தீபாவளி பண்டிகை மிக முக்கிய பண்டிகையாக உள்ளது. தீபாவளிக்கு புத்தாடை எடுப்பது, இனிப்புகள் தயாரிப்பது, தங்க நகை வாங்குவது, புதிய வாகனம், வீடு அல்லது வீட்டு தேவையான பொருட்களை வாங்குவது என ஏதேனும் ஒரு சிறப்பான விஷயத்தை செய்ய பலரும் ஆசைப்படுவர். இதற்காக தான் இந்திய நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தீபாவளி போனஸ் (Diwali Bonus) வழங்குவர். இந்த போனஸில் ஊழியர்களுக்கு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வர்.

இந்த நிலையில் தான், தீபாவளி போனஸை முறையாக பயன்படுத்த சில வழிகள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடன்களை திருப்பிச் செலுத்துதல்

கிரெடிட் கார்டு பில் அல்லது தனியார் கடன்களை அடைப்பது புத்திசாலி தனமான ஒன்றாக உள்ளது. காரணம் கிரெடிட் கார்டு நிலுவை தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி வசூல் செய்யப்படுகிறது. இதுவே ஒரு ஆண்டுக்கு 36 சதவீதம் ஆகும். எனவே, கிரெடிட் கார்டு நிலுவை தொகையை செலுத்துவது பணத்தை சேமிக்க உதவும்.

இதையும் படிங்க : வீட்டுக் கடன், வாகன கடன் EMI செலுத்துபவர்களுக்கு சிக்கல்.. ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

அவசர கால நிதி

மனிதர்களின் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் அவசர தேவைகள், பண செலவு ஏற்படலாம். எனவே, உங்களுக்கு வரும் தீபாவளி போனசில் ஒரு பகுதியையாவது எடுத்து உங்களது அவசரகால நிதிதி வரவு வையுங்கள். அது உங்களது எதிர்காலத்தை பாதுகாக்க வழிவகை செய்யும்.

காப்பீடு

பலரும் வேலை செய்யும் நிறுவனங்கள் ஹெல்ஸ் இன்சூரன்ஸ் வழங்குவதே போதுமானது என நினைக்கின்றனர். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வரை தான் அதனை பயன்படுத்த முடியும். அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டுமே. எனவே, நல்ல காப்பீடு திட்டத்தை தேர்வு செய்து அதில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க : தீபாவளி ஆஃபர்ஸ்.. நெக்ஸான் முதல் கைலாக் வரை.. இந்த 5 எஸ்யூவி கார்களுக்கு என்ன தள்ளுபடி!

முதலீடு

போனஸ் தொகையை பண்டிகைக்காக மட்டுமே செயல்படுத்தாமல், அதில் குறிப்பிட்ட தொகையையாவது எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

Follow Us