வாட்ஸ்அப் குரூப்பில் 4 புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யும் மெட்டா.. என்ன என்ன தெரியுமா?
4 New WhatsApp Group Features | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் பல்வேறு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் குரூப்பில் 4 புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டாவின் (Meta) வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்களது தினசரி தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்கும் வகையிலும் மெட்டா, வாட்ஸ்அப்பில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும்.
அந்த வகையில், வாட்ஸ்அப் குரூப் சாட்டில் (WhatsApp Group Chat) 4 புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அவை என்ன என்ன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
4 புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யும் மெட்டா
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் குரூப் சாட்டில் நான்கு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, குறுஞ்செய்திகளை பின் செய்வது, ஏற்கனவே குழுவில் இணைந்துள்ளவர்கள், புதியதாக இணைந்தவர்களுக்கு வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை பகிர்வது, குழுக்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் மற்றும் படிக்கப்படாமல் உள்ள சாட்களுக்கான ஃபில்டர் ஆகியவை இந்த அம்சங்களில் அடங்கும்.




இதையும் படிங்க : ஃபிளிப்கார்ட் தீபாவளி சேல் – ஐபோன் 17, சாம்சங் S25 FE போன்களுக்கு அதிரடி தள்ளுபடி
குறுஞ்செய்திகளை பின் செய்துக்கொள்ளலாம்
வாட்ஸ்அப்பில் தற்போதுள்ள வசதியின் படி, குழுவில் ஏதேனும் ஒரு குறுஞ்செய்தியை குறிப்பிட்ட காலம் வரை தான் பின் செய்ய முடியும். அதன் பிறகு மீண்டும் அதனை பின் செய்ய வேண்டும். இந்த புதிய அம்சத்தின் மூலம் குறுஞ்செய்திகளை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
குழு சாட் ஹிஸ்டரியை ஷேர் செய்வது
தற்போதுள்ள முறைப்படி ஏற்கனவே இருக்கும் குழுவில் ஒருவர் புதியதாக இணைக்கப்பட்டால், அவர் இணைந்த நாள், நேரம் முதல் மட்டுமே அவரால் சாட்களை படிக்க முடியும். ஆனால், இந்த புதிய அம்சத்தின் மூலம் ஏற்கனவே குழுவில் இருக்கும் நபர், புதியதாக இணைந்த நபருக்கு பழைய சாட் ஹிஸ்டரியை அனுப்ப முடியும்.
விரிவாக படிக்க : ஐபேட் மினியை அறிமுகம் செய்த ஆப்பிள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?.. முழு விவரம் இதோ!
ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்
தற்போதுள்ள நிலையில், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தால் அது அனைவருக்கும் சென்று சேறும். ஆனால், இந்த புதிய அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட குழுவுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் அப்டேட் ஷேர் செய்ய முடியும்.
படிக்கப்படாத சாட்களை கண்டுபிடிப்பது
ஃபில்டர் ஃபார் மென்ஷன் அண்ட் ரிப்ளைஸ் (Filter For Mention and Replies) என்ற ஆப்ஷனையும் மெட்டா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் டேக் செய்யப்பட்ட மெசேஜ்கள் படிக்காமல் இருந்தால் அதனி ஃபில்டர் செய்து படிக்க முடியும்.