Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுதந்திர தினம் அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவது ஏன்?.. காரணம் இதுதான்!

79th Independence Day Celebration | இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025-ல் இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

சுதந்திர தினம் அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவது ஏன்?.. காரணம் இதுதான்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Aug 2025 08:00 AM IST

79வது சுதந்திர தின விழாவை (Independence Day) கோலகலமாக கொண்டாட இந்தியா முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்ற உள்ள செங்கோட்டை, டெல்லியில் உள்ள நுழைவு வாயில் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்கள் அரசின் முக்கிய அடையாளமாக உள்ள நிலையில், ஏன் ஒவ்வொரு ஆண்டும் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள இந்தியா

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படும். அந்த வகையில், இந்தியா நாளை (ஆகஸ்ட் 15, 2025) தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. சுதந்திர தின விழாவின் சிறப்பாக காலை 7 மணிக்கு செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்ற உள்ளார். அதனை தொடர்ந்து முப்படைகளின் சாகச நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள்  என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதையும் படிங்க : சுதந்திர தினம் 2025: மத்திய அரசின் ஹர் கர் திரங்கா போட்டியில் பங்கேற்பது எப்படி?

பிரதமர் ஏன் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார்?

  • விடுதலைக்கு பிறகு செங்கோட்டை சுதந்திர இந்தியாவின் அடையாளமாக மாறிவிட்டது.
  • செங்கோட்டையில் இருந்து தான் இந்தியாவின் சுதந்திர பிரகடனம் முதன் முதலில் வாசிக்கப்பட்டது.
  • செங்கோட்டை டெல்லியின் மைய பகுதியில் அமைந்துள்ளது. பாதுகாப்பு கண்ணோட்டத்திற்கும் இது சிறந்ததாக விளங்குகிறது.
  • செங்கோட்டை இந்தியர்களுடன் உணர்வு பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்த சில முக்கிய காரணங்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதையும் படிங்க : ஆகஸ்ட் 15 இந்தியாவை போலவே இந்த நாடுகளுக்கும் சுதந்திர தின விழா தான்.. பட்டியல் இதோ!

செங்கோட்டையின் வரலாறு

செங்கோட்டை டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ஆகும். இது முகலாய பேரரசர் ஷாஜஹானால் 1638 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோட்டையை கட்டி முடிக்க 8 முதல் 10 ஆண்டுகள் காலம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பிறகு ஜவஹர்லால் நேரு முதன் முதலாக செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அதன் பாரம்பரியமாக இன்றுவரை செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.