Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PM Modi : செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!

PM Modi Independence Day Speech : சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். தொடர்ந்து 12வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, உரையாற்றிய பிரதமர் மோடி, எந்தவொரு மிரட்டலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், தகுந்த பதில் அளிக்கப்படும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

PM Modi : செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Aug 2025 08:09 AM

டெல்லி, ஆகஸ்ட் 15 : அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இந்தியா இனி அச்சுறுத்தப்படாது என்று பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஆகஸ்ட் 15ஆம்  தேதி (இன்று) நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் (Independence Day) கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். தொடர்ந்து 12வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்பு பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, முப்படைகளில் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை ஆகிய முப்படைகளில் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி, தொடர்ந்து, தேசியக் கொடியை ஏற்றினார். இதனை அடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், 21 குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது. மேலும், எம்ஐ-17 ஹெலிகாப்டர் மலர் தூவப்பட்டது.

தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாடு ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இது கூட்டு சாதனை மற்றும் பெருமைக்கான தருணம். இன்று நாம் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் நனைந்துள்ளோம். நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது. நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்.75 ஆண்டுகளாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் போல நமக்குப் பாதையைக் காட்டி வருகிறது.

Also Read : செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி

செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் மோடி


”அணு ஆயுத மிரட்டலை இந்தியா சகித்துக் கொள்ளாது”

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்தன, சவால்களும் பெரியவை. 79-வது சுதந்திர தினத்தன்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. நமது சுதந்திரப் போராட்டத்திற்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கும் நமது பெண் சக்தியின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது” என கூறினார். தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதத்தின் எஜமானர்களை தங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டித்த நமது துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

ஏப்ரல் 22 ஆம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் மதத்தைக் கேட்ட பிறகு அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொன்றனர். முழு தேசமும் கோபமடைந்தது. பாகிஸ்தானில் நமது ஆயுதப் படைகளால் ஏற்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருந்தது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது, எந்த மிரட்டலுக்கும் நாங்கள் ஆளாக மாட்டோம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இனி நாங்கள் பொறுத்துக்கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள்  மூலம் பதிலடி கொடுக்கப்படும். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியா இப்போது முடிவு செய்துள்ளது. இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் அநீதியானது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். சிந்து நதி அமைப்பிலிருந்து வரும் நீர் எதிரிகளின் நிலங்களுக்கு பாசனம் செய்து வருகிறது”  என கூறினார்.