ஸ்டிக்கர்ஸ் முதல் வாழ்த்து செய்தி வரை.. 79வது சுதந்திர தினத்துக்கு இப்படி வாழ்த்து சொல்லுங்கள்!
India's 79th Independence Day | இந்தியா இன்று (ஆகஸ்ட் 15, 2025) தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. இந்த சுதந்திர தின விழாவுக்கு வழக்கமாக வாழ்த்து சொல்லாமல் மிகவும் வித்தியாசமாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்த்து தெரிவிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை (79th Independence Day Celebration) இன்று (ஆகஸ்ட் 15, 2025) கோலாகலமாக கொண்டாடி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் நாட்டு பற்றுடன் தங்களது சுதந்திர தின விழா வாழ்த்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துக்கொண்டு வருகின்றனர். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், குறுஞ்செய்தி, ஸ்டிக்கர்கள் மூலம் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பரிமாறுவது குறித்த சில டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா
இந்தியா இன்று (ஆகஸ்ட் 15, 2025) தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கமான முறையில் இல்லாமல் புது விதமாக சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பகிர்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : சுதந்திர தினம் அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவது ஏன்?.. காரணம் இதுதான்!




வாட்ஸ்அப்பில் சுவாரஸ்யமான ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்து கூறுங்கள்
சுதந்திர தின விழா வாழ்த்து சொல்ல கூகுளில் இருந்து புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக வாட்ஸ்அப் மூலம் மிக எளிதாக வாழ்த்து ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.
- அதற்கு முதலில் வாட்ஸ்அப் சேட்க்குள் செல்ல வேண்டும்.
- அதில் உள்ள ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள GIF டேபை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதில் Happy Independence Day என சர்ச் செய்ய வேண்டும்.
- அதில் வரும் ஸ்டிக்கர்களில் சிறந்த ஸ்டிக்கரை தேர்வு செய்து அனுப்புங்கள்.
இப்படி வாழ்த்து செய்தி அனுப்புங்கள்
வழக்கமாக அனுப்புவதை போல Happy Independence Day என வாழ்த்து செய்தி அனுப்பாமல், கீழ் காணும் வாழ்த்துகளை அனுப்புங்கள்.
- Wishing you a Happy Independence Day 2025! Let’s sacrifice of our freedom fighters and work together for a brighter tomorrow.
- May the spirit of freedom and unity live in our hearts forever. Happy 79th Independence Day.
- This Independence Day, Lets celebrate our past, cherish our present, and dream of better future.
இந்த வாக்கியங்களை பயன்படுத்தி உங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.