Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

79வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பு!

79th Independence Day : இந்தியா 79வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 2025ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் புதிய பாரதம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனால், செங்கோட்டை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

79வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பு!
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Aug 2025 06:49 AM

டெல்லி, ஆகஸ்ட் 15 :  இந்தியாவின் 79வது சுதந்திர தினம் (Independence Day) 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை அடைந்தது. 1947 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா  சுதந்திரம் பெற்று வெளியேறிய வரலாற்று நிகழ்வை இந்த நாள் குறிக்கிறது. தற்போது, இந்தியா 79வது சுதந்தி தினத்தை கொண்டாடுகிறது. சுதந்திர தினத்தன்று ஒவ்வாரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றுவது வழக்கம். அந்த வகையில், பிரதமர் மோடி (PM Modi) 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று காலை தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றுகிறார். காலை 7.30 மணியளவில் செங்கோட்டைக்கு வந்து மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு தேசியக் கொடியை ஏற்றுவார்.

செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி

இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் தேசிய கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும். பிரதமர் மோடி கொடியேற்றியதும் வான்படை இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைப்பார்கள். தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். 2014 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரதமர் மோடி தொடர்ந்து 12 வது சுதந்திர தின உரை இதுவாகும்.  ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், நாட்டு பாதுகாப்பு, பாதுகாப்பு படையினரின் பங்கு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, மொழி, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என கூறப்படுகிறது.

Also Read : சுதந்திர தினம் அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவது ஏன்?.. காரணாம் இதுதான்!

2025ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் புதிய பாரதம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவோம் என பிரதமர் மோடி கூறி வருகிறார். அதை கருப்பொருளாக வைத்து சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு


ஆபரேஷன் சிந்தூரை குறிக்கும் வகையில், செங்கோட்டையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக சிறப்பு விருந்தினர்கள், உயர் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள். குறிப்பாக, 2,500 மாணவர்களும், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,  தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்ககோட்டை சுற்றி  11,000 க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும், 3,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read : சுதந்திர தினம் 2025: மத்திய அரசின் ஹர் கர் திரங்கா போட்டியில் பங்கேற்பது எப்படி?

டெல்லி காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் அப்பகுதியில் பல அடுக்கு பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்புக்காக சிறப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை எங்கே பார்க்கலாம்?

சுதந்திர தின நிகழ்ச்சியும் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும். காலை முதல் சிறப்பு ஒளிபரப்பு தொடங்கும், பார்வையாளர்கள் வீட்டிலிருந்தே முழு நிகழ்ச்சியையும் ரசிக்க முடியும். பிரதமர் மோடியின் நேரடி உரையைக் கேட்க, பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) அதிகாரப்பூர்வ YouTube சேனலைப் பார்வையிடலாம். பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.