AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாள சினிமாவில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான உயிர் படம் – எப்படி இருக்கு?

Uyir Malayalam Movie OTT Review | மலையாள சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த படம் உயிர். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான உயிர் படம் – எப்படி இருக்கு?
உயிர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Aug 2026 20:39 PM IST

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரோஷன் மேத்யூ. மலையாள சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ரோஷன் மேத்யூ தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரோஷன் மேத்யூ நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் உயிர். இந்தப் படம் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பாணியில் உருவாகி இருந்தது. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் பத்மகுமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரோஷன் மேத்யூ உடன் இணைந்து நடிகர்கள் பைஜு சந்தோஷ், அதுல்யா சந்திரா, ஸ்ருதி மேனன், வினீத் தட்டில் டேவிட், சந்தோஷ் திருவிக்ரமன், சயாமி கெர், வினோத் சாகர், ஷாஜு ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் முரளி, திவ்யா எம். நாயர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த உயிர் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

உயிர் படத்தின் கதை என்ன?

நடிகர் ரோஷன் மேத்யூ இந்தப் படத்தில் பயிற்சி நிலை உதவி ஆய்வாளர் அஜீப் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். சிறு வயதில் குடும்பத்தினர் உடன் பயணிக்கும் போது ரயிலில் தனது தங்கை பாத்துவை தொலைத்த ட்ராமாவும் அஜீப்பிற்கு உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பயிற்சி நிலை உதவி ஆய்வாளர் அஜீப் வேலை செய்யும் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கிணற்றில் ஒரு பிணம் இருப்பதாக தகவல் வருகிறது.

Also Read… முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்… விஸ்வநாத் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

அந்த பகுதிக்கு சென்ற அஜீப் அது ஒரு 30 முதல் 35 வயதுடைய கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணின் உடல் என்று தெரிகிறது. அந்தப் பெண் உடல் இங்கு எப்படி வந்தது அவரை யார் கொலை செய்தார்கள் என்பதை அஜீப் விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. இறுதியில் சரியன குற்றவாளி யார் என்பதை அஜீப் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. மேலும் இந்தப் படம் கேரளாவில் நடைப்பெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது பார்க்கலாம்.

Also Read…  மீண்டும் ஒரு ஃபீல் குட் படம்… வைரலாகும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ட்ரெய்லர்

Follow Us