Lakshmi Priya: பிக் பாஸிலிருந்து வெளியேறிய லக்ஷ்மி பிரியா.. கதறி அழுத்த சாதிகா!
Bigg Boss Lakshmi Priya eviction: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி 3வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த விதத்தில் தலைவரின் எக்சிட் லிஸ்டில் கடந்த வாரம் ஜாவித் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 3வது வாரத்தின் முடிவில் லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுவரும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் நடக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ. இறுதியாக பிக் பாஸ் சீசன் 9 நடைபெற்றிருந்த நிலையில், அதன் பிறகு 2026 ஆண்டில் தொடங்கிய புதிய ஷோதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், இதுவரை 2 வாரங்களை கடந்துள்ளது. மேலும் 3வது வாரத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சி இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த வாரத்தில் எந்த போட்டியாளரை வெளுத்துவாங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் கடந்த இரு வாரமாக பிக் பாஸ் வீட்டின் லீடர் எக்சிட் மூலமாக ஒரு போட்டியாளரை வெளியேற்றவேண்டும் என்ற நிலை உள்ளது.
கடந்த வாரத்தில் ஜாவித் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தில் முத்தழகி, லக்ஷ்மி பிரியா மற்றும் ஆனந்தி என மூன்று போட்டியாளர்கள் அந்த லிஸ்டில் இருந்தனர். அந்த விதத்தில் வீட்டின் சக போட்டியாளர்களின் ஓட்டின் மூலமாக லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்காக முத்தழகி மற்றும் சாதிகா கதறி அழுத்துள்ளனர்.




இதையும் படிங்க: பெத்தலேகம் குடும்ப யூனிட் பட இயக்குநர் முந்தைய படங்கள பாத்து இருக்கீங்களா? லிஸ்ட் இதோ!
பிக் பாஸிலிருந்து வெளியேறிய லக்ஷ்மி பிரியா குறித்த புரோமோ பதிவு:
#Day19 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/C9nRhGnT1S
— Vijay Television (@vijaytelevision) September 25, 2026
இந்த புரோமோவில் இந்த வாரத்தின் தலைவர் எக்சிட் லிஸ்ட்டில் உள்ள போட்டியாளர்கள் 3வரில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து வீட்டின் போட்டியாளர்களால் வெளியேற்றப்படவேண்டும். அந்த விதத்தில் 3வது வாரத்தின் இறுதியில் லக்ஷ்மி பிரியா, முத்தழகி மற்றும் ஆனந்தி என மொத்தம் 3 போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க: சரியா பேசலானு ஒன் மோர் கேட்டுட்டே.. ஏழு கடல் ஏழு மலை பட ஷூட்டிங்கில் நடந்த விஷயம் குறித்து கலகலப்பாக பேசிய சூரி!
அந்த விதத்தில் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்களின் வாக்குகள் படி, லக்ஷ்மி பிரியாவிற்க்கே அதிக ஓட்டுகள் விழுந்திருந்தது. அதனால் இந்த வாரத்தில் லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் முத்தழகி மற்றும் சாதிகா இருவருமே லக்ஷ்மி பிரியாவை கட்டியணைத்து கதறியழுத்துள்ளனர். இது குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10ல் இந்த வாரத்தின் எவிக்ஷன்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி 19 வது நாளை கடந்திருந்தது. மற்ற சீசன்களை போல இல்லாமல், இந்த பிக் பாஸ் சீசன் 10ல் தொடக்கத்திலிருந்தே போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டுவருகிறது. இதனால் பல சண்டைகள் மற்றும் பல பிரச்சனைகளும் இருக்கிறது. அந்த விதத்தில் இதுவரை மொத்தமாக 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தமாகவே 16 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வாரத்தில் பெரிதாக எவிக்ஷன் இருக்காது என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.