AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸில் தலைவர் எக்சிட் லிஸ்ட்.. இந்தவாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?

Big Boss leader eviction: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 3 வாரங்களான நிலையில், வாரத்திற்கு ஒருவர் வீட்டின் தலைவர் எக்சிட் லிஸ்ட் மூலம் வெளியேற்றபடுவார், அந்த விதத்தில் இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

பிக் பாஸில் தலைவர் எக்சிட் லிஸ்ட்.. இந்தவாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?
பிக் பாஸ் தமிழ் 10Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Sep 2026 18:50 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தமிழில் தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 3வது வாரத்தில் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த வாரத்தில் ஜாவித் மற்றும் மணிவண்ணன் என இருவர் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்த விதத்தில் இந்த வாரத்தின் வீட்டின் தலைவராக இருந்துவருபவர் அவினாஷ் அசோக் மேலும் எதிர் அணி தலைவராக ராகவ் இருந்துவருகிறார்.

மேலும் இந்த வாரத்தின் நாமினேஷன் லிஸ்டில் லக்ஷ்மி பிரியா, ராகவ், ஆனந்தி, சாதிகா போன்ற போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்தில் தலைவர் எக்சிட் லிஸ்டின் மூலமாக ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுளாம். அது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

இந்த வாரத்தில் வீட்டின் தலைவர் மூலம் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?:

இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 வாரம் வாரமாக தலைவரின் தேர்ந்தெடுத்தல் மூலமாக போட்டியாளர் ஒருவர் எந்தவித மக்களின் வாக்குகள் இல்லாமல் வெளியேற்றப்படுவார். அந்த விதத்தில் இந்த வாரத்தில் அவினாஷ் அசோக் தேர்ந்தெடுத்த 3 போட்டியாளர்கள் லிஸ்ட்டில், முத்தழகி மற்றும் லக்ஷ்மி பிரியா மற்றும் ஒரு போட்டியாளர் என மொத்தம் மூன்றுபேர் தலைவர் எக்சிட் லிஸ்ட்டில் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் இந்த வீட்டிலிருந்து லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: குடும்பத்தின் நற்பெயர்.. அதிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன்.. விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சய்!

தலைவர் எக்சிட் லிஸ்டில் இடம்பெற்ற லக்ஷ்மி பிரியா, அவினாஷ் குறித்து பேசியது தொடர்பான புரோமோ:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட தொடங்கி 18 நாட்களான நிலையில், வார இறுதியை நெருங்கியுள்ளது. ஏற்கனவே மொத்தம் 18 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இந்த வாரத்திலும் ஒருவர் வெளியேறவுள்ளாராம். அது குறித்த தகவல்கள் இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

Follow Us