Vishal: விஷாலின் புருஷன் பட கிளைமேக்ஸ் சண்டை காட்சி விபத்து – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Purushan Climax Shoot Accident: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவர் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் பட ஷூட்டிங்கில் இருக்கிறார். இதன் கிளைமேக்ஸ் காட்சியின்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் விஷால் (Vishal) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மகுடம் (Magudam). இந்த படத்தை நடிகர் விஷால் இயக்கி நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை போன்ற கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு புது புது படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் இவர் இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் புருஷன் (Purushan) என்ற படத்தில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஷூட்டிங்கானது கோவாவில் நடைபெற்றுவந்தது.
இந்த ஷூட்டிங்கில் சண்டை காட்சியின்போது நடிகர் விஷாலுக்கு முதுகில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாம். அது குறித்த தகவலால் வெளியாகிவந்த நிலையில், தற்போது அந்த காட்சியின்போது நடந்த விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
புருஷன் பட ஷூட்டிங்கில் விஷாலுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து இணையத்தில் பரவும் வீடியோ பதிவு:
Actor #Vishal had an accident during the climax stunt sequence of the film #Purushan, directed by Sundar C, in Goa. pic.twitter.com/tXQbZtVo3A
— Movie Tamil (@_MovieTamil) September 27, 2026
இந்த புருஷன் படமானது பேமிலி ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் நிலையில், இதில் நிறைவாய் சண்டை காட்சிகள் உள்ளதாம். சமீபத்தில் கோவாவில் இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஸ்டண்ட் செய்யும்போது விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்களாம்.
புருஷன் பட ரிலீஸ் எப்போது இருக்கும்:
இந்த புருஷன் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகர் யோகிபாபு நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
இந்த புருஷன் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளதால். இந்த கூட்டணியானது ஏற்கனவே அம்பல என்ற படத்திற்காக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.