Chiranjeevi: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
Chiranjeevi Praises Jason Sanjay: தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி. இவர் சமீபத்தில் தெலுங்கானாவில் நடைபெற்றிருந்த சிக்மா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் அவர் ஜேசன் சஞ்சய் மற்றும் அவரின் தந்தையான முதல்வர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
டோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி (Megastar Chiranjeevi). இவர் தெலுங்கில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் “மன ஷங்கர வர ப்ரசாத் காரு” (Mana Shankara Vara Prasad Garu) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். இதன் பிறகு விஸ்வம்பரா என்ற படமும் உருவாக்கி இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதையடுத்து காக்க (Kaaka) என்ற புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவி நடித்துவருகிறார். இதை இயக்குநர் பாபி கொல்லி இயக்க, அனஸ்வரா ராஜன், நிவேதா பெத்துராஜ் மற்றும் சுனில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது.
அந்த விதத்தில் படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் சிரஞ்சீவி நேற்று (25/09/2026) தெலுங்கானாவில் நடைபெற்றிருந்த சிக்மா (Sigma) படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) மற்றும் முதலமைச்சர் விஜய் (CM Vijay) குறித்தும் பேசியுள்ளார்.




இதையும் படிங்க: மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
ஜேசன் சஞ்சய் மற்றும் அவரின் தந்தையான முதல்வர் விஜய் குறித்து பேசிய சிரஞ்சீவி:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய தெலுங்கு நட்சத்திரம் சிரஞ்சீவி, “நான் ஜேசனை முதன்முதலில் பார்த்தபோது, அவர் தன் தந்தை விஜய், 90ஸ் காலகட்டத்தில் இருந்தது போலவே அச்சு அசலாக இருப்பதாக உணர்ந்தேன். அவரது தந்தை விஜய் அடைந்திருக்கும் அந்தஸ்து நம் அனைவருக்கும் தெரியும். ஜேசனும் அதுபோன்ற பெரும் உயரங்களை எட்டி, பெரிய பதவிகளை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என அதில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் சிக்மா படத்தின் 4-வது சிங்கிள் சுலோச்சனா!
சிக்மா படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The #Sigma Pre-Release event is buzzing with stars, cheers and a whole lot of energy. ❤️🔥⚡️#SigmaInCinemasOct2@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 @saregamasouth pic.twitter.com/nzbdgXFqX4
— Lyca Productions (@LycaProductions) September 25, 2026
ஜேசன் சஞ்சய் இயக்க, சந்தீப் கிஷன் நடித்துள்ள படம்தான் சிக்மா. இதற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பாடத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இதன் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.