AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Akka web series release update | தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள அக்கா தொடரின் ரிலீஸ் அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
கீர்த்தி சுரேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2026 18:12 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டோரோத்தி. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பும் ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இணையதள தொடர் அக்கா. இந்த தொடர் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் இந்த தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வரும் தொடர் அக்கா.

கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது?

இந்த அக்கா என்ற இணையதள தொடரில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகை ராதிகா ஆப்தே முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தர்மராஜ் ஷெட்டி என்ற இயக்குநர் எழுதி இயக்கி உள்ளார். பீரியட் ட்ராமா க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த இணையதள தொடர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த அக்கா தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நானும் சூர்யாவும் இணையும் படம் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் ராஜமௌலி சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அதுக்குள்ள ஓடிடியிலா? கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

Follow Us