என்னடா புதுசு புதுசா டாஸ்க் கொடுக்கிறீங்க… மீண்டும் பிக் பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த எவிக்ட் போட்டியாளர்கள் – புரோமோ
Bigg Boss Tamil 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் 3வது வாரத்தின் இறுதியில் இந்நிகழ்ச்சி இருந்துவரும் நிலையில், தற்போது ரீ என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் மாபெரும் ஷாக் கொடுத்துள்ளனர். தற்போது புதிதாக நுழைந்த போட்டியாளர்கள் புது டாஸ்க் உடன் வந்துள்ளனர். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boos Season 10) நிகழ்ச்சியான தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக வெளியாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஒளிபரப்பாகியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 22 நாட்களான நிலையில், இதுவரை இந்த போட்டியிலிருந்து கிட்டத்தட்ட 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்களான நிலையில், தற்போதுவரை பல விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளையும் மேற்கொண்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் லக்ஷ்மி பிரியா (Lakshmi Priya) மற்றும் ஆனந்தி இருவருமே வெளியேறியிருந்தனர். அந்த விதத்தில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 3வது வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மீண்டும் நுழைந்துள்ளார்.
ஜாவித், லக்ஷ்மி பிரியா மற்றும் மற்றொரு போட்டியாளரும் நுழைந்துள்ளார். இந்த போட்டியாளர்கள் நுழைந்து புதிய ஷாக்கான டாஸ்க் உடன் நுழைந்துள்ளார். தற்போது இத்தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என்னப்பா கஷ்டமா இருக்கா? அவினாஷ் – ஜேசனை வார்த்தைகளால் வெளுத்துவாங்கிய லக்ஷ்மி பிரியா – புரோமோ!
பிக் பாஸ் சீசன் 10ல் நுழைந்த 3 போட்டியாளர்கள் மற்றும் ஷாக் டாஸ்க்:
இந்த புரோமோவில், பிக் பாஸிலிருந்து வெளியேறிய ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியவும் மற்றும் புதிய போட்டியாளர் ஒருவரும் உள்ளே நுழைந்துள்ளார். அவர்கள் கையில் வரும்போதே 5 அடி நீளம் உள்ள ரோப் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த கயிற்றினால் எந்த நபரை கட்டிபோடுகிறார்களோ, அவர்கள் அவர்களுடனே இருக்கவேண்டுமாம்.
இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பிக் பாஸில் வந்த திருப்பம் – வைரலாகும் புரோமோ!
அந்த கயிற்றினால் கட்டப்பட்ட இவர்களில் யார் இந்தத் நபர் அந்த கயிற்றை கழட்ட நினைக்கிறார்களோ அவர்கள் இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என கூறப்படுகிறது. தற்போது இது குறித்த புரோமோ இணையத்தில் வெளியாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10ன் 21வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day21 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/5nxdmPZgnS
— Vijay Television (@vijaytelevision) September 27, 2026
தற்போது இதுகுறித்த புரோமோ குறித்த பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருக்கிறது. தற்போது மேலும் 3 போட்டியாளர்கள் நுழைந்துள்ள நிலையில், மேலும் இந்த நிகழ்ச்சியானது சூடுபிடிக்கும் என கூறப்படுகிறது.