அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்… 21 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் கஜினி படம் – கொண்டாடும் ரசிகர்கள்!
21 Years Of Ghajini Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற கஜினி படம் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான தீனா என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் கஜினி.
இந்தப் படம் நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் மிகவும் முக்கியமான படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக அசின் நடித்து இருந்த நிலையில் வில்லனாக நடிகர் பிரதீப் ராவத் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
21 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் கஜினி படம்:
படம் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்றுடன் படம் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா பெரிய தொழிலதிபராக இருப்பார். அவர் விளம்பர படங்களில் மாடலாக இருக்கும் அசினை எதிர்பாராத ஒரு வேலையில் சந்திப்பார். அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலிப்பார்கள்.




இப்படி இருக்கும் நிலையில் பெண் குழந்தைகளை கடத்தும் கும்பலிடம் இருந்து அந்த குழந்தைகளை காப்பாற்றிய அசின் வில்லன்களால் தாக்கப்படுகிறார். அதில் அவர் உயிரிழந்த நிலையில் சூர்யாவிற்கு தலையில் அடிபட்டு மெமரி லாஸ் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை என்ன என்றால் அவருக்கு 15 நிமிடத்திற்கு ஒரு முறை அனைத்தும் மறந்துவிடும்.
இதனால் அவர் பார்க்க நினைக்கும் நபர்களையும் பழிவாங்க நினைக்கும் நபர்களின் பெயர்களையும் உடலில் பச்சை குத்தி வைத்து இருப்பார். இறுதியில் எப்படி அசினை கொலை செய்தவர்களை பழிவாங்கினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Sandeep Kishan: சினிமாவுக்கு வர காரணம் இதுதான்.. உண்மையை உடைத்து சொன்ன சந்தீப் கிஷன்!