Sigma: சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில்.. ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
Jason Sanjay Sigma Movie Review: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படங்களில் ஒன்று சிக்மா. இதை தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். அந்த விதத்தில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் மாபெரும் தூணாக இருந்துவந்தவர் முதல்வர் விஜய் (CM Vijay). இவர் முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், சினிமாவிலிருந்து விலகிவிட்டார். அந்த விதத்தில் இவருக்கு பிறகு அவரின் மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ளார். தனது இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் முதல் முதலில் இயக்கியுள்ள திரைப்படம்தான் சிக்மா (Sigma). இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க, தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் ஃபரியா அப்துல்லா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்க, தமன் எஸ் (Taman S) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.
இந்த படமானது இன்று (02/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சிக்மா பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்காக திரையரங்கு வந்த சங்கீதா – திவ்யா ஷாஷா – வைரலாகும் வீடியோ!
ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் விமர்சனங்கள்:
#Sigma first half – For a debut filmmaker, @official_jsj shows signs of promise. Technically fine work, film is in the zone of @vp_offl ‘s heist thrillers. Adequately engaging so far. @MusicThaman ‘s music is a major advantage 👍 @sundeepkishan fits the bill for an underdog
— Rajasekar (@sekartweets) October 2, 2026
ஜேசன் சஞ்சய் இயக்குநராக முதல் முதலில் இயக்கியுள்ள படம்தான் சிக்மா. இந்த படமானது பணக்கொள்ளை மற்றும் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது இன்று (02/10/2026) வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கிறது. இப்படமானது.
சிக்மா திரைப்படம் எப்படி இருக்கு:
இப்படத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவே கிட்டத்தட்ட 40 நிமிடங்களாகிறதாம். அதனால் சில காட்சிகள் தொய்வாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படமானது விறுவிறுப்பான திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் இப்படத்தின் இண்டெர்வெல் காட்சி பல திருப்பங்களுடன் அமைந்த்துள்ளதாம். ஜேசன் சஞ்சய் இதை நன்றாக இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: எதாவது பிரச்சன வரும்போது.. மோகன்லால் சார் தைரியம் கொடுப்பாரு – நிவின் பாலி பேச்சு!
சிக்மா படத்தில் நடிகர்களின் நடிப்பு எவ்வாறு உள்ளது:
இந்த சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தை எந்தவித குறையும் இல்லாமல் அவர் நடித்திருக்கிறார். மேலும் நடிகை ஃபரியா அப்துல்லாவின் கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்துள்ளதால், படத்தில் இவர்கள் இருவரின் காட்சி சிறப்பாக அமைந்துள்ளதாம்.
சிக்மா படத்தின் பாடல்கள் மற்றும் பின்ன்ணி இசை எவ்வாறு உள்ளது:
ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால். ஒவ்வொரு காட்சிகளுக்கும் தமன் இசை சிறப்பாக அமைந்துள்ளதால். இப்படத்திற்கு அவரின் இசை ஒரு தூணாக உள்ளதாக கூறப்படுகிறது.
சிக்மா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?:
ஜேசன் சஞ்சய் முதல் முதலாக இயக்கியுள்ள இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது. இப்படமானது வெங்கட் பிரபுவின் கொள்ளை கதைங்கலம் கொண்ட படம்போல இருப்பதாகவும் பல விமர்சனங்கள் வருகிறது. பணக்கொள்ளை, சுவாரஸ்ய திருப்பம் மற்றும் சிறப்பான ஜானர் படத்தை பார்க்க விரும்புபவர்கள் இப்படத்தை நிச்சயமாக ஒருமுறையாவது திரையரங்கு சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.