AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிக்மா பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்காக திரையரங்கு வந்த சங்கீதா – திவ்யா ஷாஷா – வைரலாகும் வீடியோ!

Sangeetha and Divya Shasha: ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்தில் தமிழில் இன்று 2026 ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் படம்தான் சிக்மா. இந்த படமானது திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் FDFS காட்சியை அம்மா சங்கீதா மற்றும் அவரின் சகோதரி திவ்யா ஷாஷா இருவரும் இணைந்து பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிக்மா பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்காக திரையரங்கு வந்த சங்கீதா – திவ்யா ஷாஷா – வைரலாகும் வீடியோ!
சங்கீதா மற்றும் திவ்யா ஷாஷாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2026 11:29 AM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து, தற்போது தமிழக முதல்வராக இருந்துவருபவர் விஜய் (CM Vijay). இவர் தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக விலகிய நிலையில், அவரின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார். இயக்குநராக சிக்மா (Sigma) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். சிக்மா படமானது இன்று (02/10/2026) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

அதை முன்னிட்டு ஜேசன் சஞ்சயின் தாய் சங்கீதா (Sangeeth) மற்றும் சகோதரி திவ்யா ஷாஷா (Divya Shasha) இருவருமே சென்னையில் உள்ள திரையரங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அப்பா – அம்மாவை நான் வெவ்வேறு விதங்களில் ஒப்பிடுவேன்… ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்

சிக்மா படத்தை திரையரங்குகள் சென்று பார்வையிட்ட சங்கீதா மற்றும் திவ்யா ஷாஷா:

ஜேசன் சஞ்சய் இயக்குநராக முதல் முதலில் இயக்கியுள்ள திரைப்படம்தான் சிக்மா. இந்த படமானது இன்று (02/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சங்கீதா மற்றும் திவ்யா ஷாஷா இருவருமேவ் பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் திவ்யா ஷாஷா பல நாட்களாக எந்த மீடியாக்களில், வீடியோக்களில் வரவில்லை. அந்த விதத்தில் தற்போது ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை பார்வையிட வந்த நிலையில், அது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிக்மா திரைப்படத்தை பார்வையிடவந்த சங்கீதா மற்றும் திவ்யா ஷாஷாவின் வீடியோ பதிவு:

ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் முதல் முதலாக இன்று வெளியான படம்தான் சிக்மா. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்துவந்தது. அந்த விதத்தில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us