AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Suriya 48 Movie Shooting Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சூர்யா 48. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் நிலவரம் குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
சூர்யா 48 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2026 13:08 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்கள் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன்.

இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ள இந்த சீன் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.

விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்:

மேலும் இந்தப் படத்திற்கு தற்போது சூர்யா 48 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் சூர்யா 48 திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் படக்குழுவினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Mammootty: டோரதி பட திரையரங்கு வரவேற்பு.. படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய மம்முட்டி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை 2 படம் இப்படிதான் உருவாகிறதா?

Follow Us