நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை 2 படம் இப்படிதான் உருவாகிறதா?
Sarpatta Parambarai 2 movie update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமாக உள்ளது சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி அவ்வபோது படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா அவ்வபோது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இறுதியாக அனந்த காடு என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வேட்டுவம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்க உள்ள படம் சார்பட்டா பரம்பரை பாகம் 2. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.




நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை 2 படம் இப்படிதான் உருவாகிறதா?
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சர்ப்பட்ட பரம்பரை 2 ஒரு முன்கதை + தொடர்ச்சி என்று கூறப்படுகிறது. 1940-1950 களில் சர்பட்டா மற்றும் இடியப்பா பிரிவின் தோற்றத்தைக் காட்டும் முன்கதை, வேம்புலியின் தந்தை, ரங்கன் வாத்தியார், அப்பா மற்றும் கபிலனின் தந்தையைக் காண்பிக்கும், இது தற்போதைய காலவரிசையில் அமைக்கப்படும் கபிலனின் பரம்பரைக்குப் பின் சர்ப்பட்டா எழுச்சியைக் காண்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SarpattaParambari2 is said to be a prequel + sequel. The prequel will be set in the 1940s–1950s, showcasing the origin of the Sarpatta and Idiyappa split, showcasing Vembuli’s father, Rangan Vaathiyar, Daddy and Kabilan’s father, which will then lead to the sequel set in the… pic.twitter.com/pYzV2xs48V
— Movies Singapore (@MoviesSingapore) October 2, 2026
Also Read… எல்லாரும் என்ன ட்ரிகெர் பண்ணுறாங்க.. கண்ணீர்விட்ட தன்யா – பிக் பாஸ் புரோமோ!