AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்தப் படத்தில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது – நடிகை அமலா பால்

Amala Paul talks about her movie | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அவரது முந்தைய படம் ஒன்று குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்தப் படத்தில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது – நடிகை அமலா பால்
நடிகை அமலா பால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Oct 2026 07:32 AM IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியானது நீலதாமர. இந்தப் படத்தின் மூலமாகதான் அவர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து 2010-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மேலும் நடிகை அமலா பாலிற்கு தமிழ் சினிமாவில் மைனா படம் அதிக அளவில் பிரபலத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்த நடிகை அமலா பால் சமீப காலமாக தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமலா பால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லெவல் க்ராஸ். இந்தப் படம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து இதுவரை பெரிய அளவில் எந்த படங்களில் நடிக்காமல் உள்ளார் நடிகை அமலா பால்.

அந்தப் படத்தில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது:

இந்த நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஆடை படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அந்தப் பேட்டியில் நடிகை அமலா பால் பேசியதாவது, ஆடை படத்தில் நடித்தபோது, ​​அது எனது பிம்பத்தை (image) எவ்வாறு பாதிக்கும் என்று நான் கவலைப்பட்டேன். ஆனால், இன்று அதே போன்றதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், நான் நிச்சயமாக அதில் நடிக்கமாட்டேன் என்று நடிகை அமலா பால் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… முதல் பட தோல்வி மனதளவில் பாதித்தது… ஓபனாக பேசிய ஃபகத் பாசில் – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கவே இல்லையே… பிபி ஹோட்டல் டாஸ்கில் நடந்த புதிய மாற்றம் – கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்!

Follow Us