AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் டூ சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. இந்த சிறுமி யாரு தெரியுமா?

Tamil Actress Childhood Photo: தென்னிந்த்திய சினிமாவில் பல உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்துவருகிறார்கள். அந்த வகையில் விஜய் முதல் தனுஷ் , சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்த, புகைப்படத்தில் உள்ள சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?. இது யார் என விவரமாக பார்க்கலாம்.

விஜய் டூ சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. இந்த சிறுமி யாரு தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 30 Sep 2026 08:21 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருவது தெரிந்ததே. அந்த வகையில் மேலே உள்ள போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகைனு தெரிகிறதா?. இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். மேலும் ராம் சரணின் (Ram Charan) படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். இவருக்கு அறிமுகமாக அமைந்தது மலையாள சினிமாவாக இருந்தாலும், இவரை வளர்த்துவிட்டது தமிழ் சினிமாதான். இவர் திருமணமான சில ஆண்டுகளாக நடிக்காவிட்டாலும், தற்போது மீண்டும் சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் பிரபல நடிகரை திருமணமும் செய்துகொண்டார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2024ம் ஆண்டில் தளபதி விஜய்க்கு ஜோடியாகவும் படத்தில் நடித்துள்ளார். இப்போது தெரிந்திருக்கும் அந்த சிறுமி யார் என்று, இந்த சிறுமி வேறுயாருமில்லை புன்னகை அரசி சினேகாதான் (Sneha).

இதையும் படிங்க: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்

நடிகை சினேகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

நடிகை சினேகாவின் சினிமா பயணம் :

நடிகை சினேகா மலையாளத்தில் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான “இங்கனே ஒரு நிலபக்ஷி” என்ற படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார். இதையடுத்து தமிழில் “என்னவளே” என்ற படத்தில் ஆர்.மாதவனுடன் இணைந்து நடித்து தமிழிலும் அறிமுகமானார். இதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிகையாக நுழைந்தார். தனது சினிமாவின் ஆரம்பத்திலே மேலுயலாம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் அடுத்தடுத்தாஹ் படங்களில் நுழைந்தார் . ஆரம்ப காலத்தில் இரண்டு நடிகைகள் இருக்கும் படங்களிலே சினேகா நடித்துவந்தார்.

இதையும் படிங்க: 20-வது திருமண நாளை அப்படி கொண்டாட காரணம் என்ன? சூர்யா சொன்ன விளக்கம்

அந்த விதத்தில் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்த படம் வசீகரா. 2003ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்துவந்தார். இவ்வாறு தமிழில் பல் உச்ச நடிகர்களின் படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் தீவிரமாக இருந்த சினேகா கடந்த 2012ம் ஆண்டில் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போதும் சினேகா படங்களில் நடித்துவருகிறார். இறுதியாக விஜய்யின் தி கோட் படத்தில் நாயகியாக நடித்த நிலையில், இவரின் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படமானது தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us