Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sneha: ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. நடிகை சினேகா ஓபன் டாக்!

Ajith Kumar Fans : தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னணி நடிகையாக டப் கொடுத்தவர் நடுங்கி சினேகா. இவர் விஜய் முதல் தனுஷ் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சினேகா நடிகர் அஜித் பற்றிப் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அது குறித்துப் பார்க்கலாம்.

Sneha: ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. நடிகை சினேகா ஓபன் டாக்!
சினேகா மற்றும் அஜித்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 07 May 2025 20:00 PM

நடிகை சினேகா  (Sneha) இறுதியாக நடிகர் விஜய்யின் (Vijay)  தி கோட் (The GOAT) படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம்தான் பல ஆண்டுகளுக்குப் பின் இவர் முன்னணி கதாநாயகியாக நடித்த படமாகும். நடிகை சினேகா 2000ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.  நடிகைகள்  த்ரிஷா மற்றும் சிம்ரனுக்கு  (Trisha and Simran) எல்லா இணையாக அப்போதே டஃப் கொடுத்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “இங்கனே ஒரு நிலபக்ஷி” (Ingane Oru Nilapakshi) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்திருந்தார். அதே ஆண்டு தமிழில் என்னவளே என்ற படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இவருக்குத் தொடர்ந்து பல படங்கள் குவியத் தொடங்கியது.

மேலும் இவர் தமிழைக் கடந்து தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் ஹீரோயினாக நடித்த வந்தார். நடிகை சினேகா இறுதியாக விஜய்யின் கோட் படத்தைத் தொடர்ந்து , நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் தற்போது அவர் சின்னதிரையில் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சினேகா அஜித்துடன் ஜனா படத்தில் நடந்த சம்பவம் குறித்துப் பேசியிருக்கிறார். அந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது, படப்பிடிப்பில் ரசிகர்கள் போட்டோ எடுக்க முந்தியடித்தனர். அதற்கு நடிகர் அஜித் குமார் லைனாக வந்தால் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவர் எப்போதுமே ரசிகர்களின் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார் என நடிகை சினேகா பேசியிருக்கிறார். மேலும் இதைக் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை சினேகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

நடிகை சினேகா அஜித் குமார் பற்றிப் பேசியது :

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினேகா நடிகர் அஜித்துடன் ஜனா படத்தில் நடிக்கும்போது, படப்பிடிப்பில் நடந்த விஷயம் பற்றி கூறியுள்ளார். அதில் நடிகை சினேகா “இப்படித்தான் ஒருமுறை ஜனா படத்தின் ஷூட்டிங்கின் போது, ஷூட்டிங்கில் அஜித்தைப் பார்க்கப் பல ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டார்கள். அவர்கள் அனைவரும் அஜித்துடன் தான் போட்டோ  எடுக்க விரும்பினார்கள். அதற்கு நடிகர் அஜித் என்ன செய்தார் எதிரியா? அவர் ரசிகர்களிடம் அமைதியாக லைனில் வாருங்கள் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறேன் என்று கூறினார்.

ஷூட்டிங் முடிந்தவுடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்து முடித்துத்தான் செல்வார். அதைப் பார்க்கும் பொது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு எளிமையான பந்தா இல்லாத நபர் என்று அவரை நினைத்தேன். மேலும் அவர் எப்போதுமே அவரின் ரசிகர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் அதிகம் நினைப்பார் என்று நடிகை சினேகா வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி.. ரிசல்ட்டில் அதிர்ச்சி!
விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி.. ரிசல்ட்டில் அதிர்ச்சி!...
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது? - அமைச்சர் முக்கிய தகவல்!
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது? - அமைச்சர் முக்கிய தகவல்!...
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்.....
பதஞ்சலி சொல்லும் உணவு ரகசியம்.. ஆரோக்கியம் மேம்பட சில விதிகள்!
பதஞ்சலி சொல்லும் உணவு ரகசியம்.. ஆரோக்கியம் மேம்பட சில விதிகள்!...
மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..!
மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..!...
மாமன் படத்திற்கு மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை
மாமன் படத்திற்கு மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை...
ஸ்மார்ட் வாட்ச் வாங்கப்போறீங்களா? முக்கியமாக கவனிக்க வேண்டியவை!
ஸ்மார்ட் வாட்ச் வாங்கப்போறீங்களா? முக்கியமாக கவனிக்க வேண்டியவை!...
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் உயிரிழப்பு!
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் உயிரிழப்பு!...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்டைலில் நெட்ஃபிளிக்ஸ் - புதிய அப்டேட்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்டைலில் நெட்ஃபிளிக்ஸ் - புதிய அப்டேட்...
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி!
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி!...
சூர்யா 45 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!
சூர்யா 45 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!...