AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை… வைரலாகும் தகவல்

Suriya 47 Movie Shooting Update: நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 47 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சூர்யா 47 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை… வைரலாகும் தகவல்
சூர்யா 47 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Feb 2026 15:12 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் சூர்யா நட்டிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள கருப்பு படம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூர்யா 46 படத்தின் வெளியீடு ஜூலை மாதம் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த இரண்டு படங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் உடன் இணைந்தார். அதன்படி நடிகர் சூர்யா தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர்களுடன் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்தப் படங்களுக்கு மற்ற மொழி இயக்குநர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது மாலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை:

இந்தப் படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்ற நிலையில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நஸீம் மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நிலையில் அவருக்கு நெகட்டிவ் ஷேட் கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைப்பெற்று வந்த நிலையில் அங்கு சரியான அனுமதிகள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வருவதால் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக சென்னைக்கு மாற்றியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Also Read… தனுஷ் 55 படத்தில் இணையும் பிரபல நடிகை… அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தவெக 3-ம் ஆண்டு விழாவில் சர்ப்ரைஸாக டான்ஸ் ஆடிய விஜய்… வைரலாகும் வீடியோ

Follow Us