அபிஷன் ஜீவிந்தின் முதல் படம் மாதிரி இல்லை – வித் லவ் படம் குறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேச்சு!
Cibi Chakaravarthi About Abhishan Jeevinth : தமிழில் தற்போது பிரபலமாக பேசப்பட்டுவரும் இயக்குநர்களில் ஒருவர் சிபி சக்கரவர்த்தி. இவர் ரஜினிகாந்தின் தலைவர்173 படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் வித் லவ் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர், அபிஷன் ஜீவிந்த் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி, பின் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) டான் (Don) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவனவர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi). இவர் இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமான நிலையில், இப்படமான் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்திற்கு முன் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) மெர்சல் (Mersal) திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இந்த படம் எந்தளவிற்கு வெற்றி பெற்றிருந்தது என்பது அனைவருக்குமே தெரிந்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) தலைவர் 173 (Thalaivar 173) திரைப்படத்தையும் இவரே இயக்கவுள்ளார். கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
மேலும் சமீபத்தில் நடந்த வித் லவ் (With Love) திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய இவர், இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: தலைவர் 173 படத்தை என்னால் முடிக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ஓபன் டாக்
அபிஷன் ஜீவிந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி :
வித் லவ் பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அதில், “நான் வித் லவ் திரைப்படத்தை முழுவதுமாகவே பார்த்தேன். நிச்சயமாக பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என நம்புகிறேன். இப்படத்தை பார்க்கும்போது, இது அபிஷன் ஜீவிந்தின் முதல் திரைப்படம் என்று என்னால் நம்பமுடியவில்லை. மக்கள் இப்போது இவரை ஒரு நடிகராகவே பார்க்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒரு பெரிய நட்சத்திர நடிகராகவும் மாறப்போகிறார்.
இதையும் படிங்க: டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி – கராத்தே பாபு படக்குழு
மேலும் இப்படத்தில் அனஸ்வரா ராஜன் எனக்கு நடிகை அசினை நினைவூட்டினார். மேலும் இயக்குநர் மதனும் நிச்சயமாக கவனிக்கவேண்டிய ஒருத்தர். இந்த வித் லவ் திரைப்படமானது எனக்கு ஒரு கொரியன் திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தையும், உணர்வையும் தந்தது” என அவர் அதில் பேசியுள்ளார்.
வித் லவ் படத்தின் ட்ரெய்லர் குறித்து அட்லீ வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Happy to launch #WithLove trailer ♥️
Best wishes team!
Starring @Abishanjeevinth & @AnaswaraRajan_
A @RSeanRoldan musical 🎶
Written & Directed by @madhann_n
Produced by @soundaryaarajni & @mageshraj@MRP_ENTERTAIN @Zionfilmsoff @kshreyaas… pic.twitter.com/gBUDvevg7m
— atlee (@Atlee_dir) January 30, 2026
இந்த வித் லவ் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள நிலையில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார். இதில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பள்ளிப்பருவ காதலை தேடியலையும் காதலர்களை குறித்த வித்தியாசமான காதல் கதையில் உருவாகியுள்ளது. இது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.