Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏ அழகிய தீயே… ரீ ரிலீஸாகிறது 25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே படம்

Minnale Movie Re-released Update: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரொமாண்டிக் படம் மின்னலே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ அழகிய தீயே… ரீ ரிலீஸாகிறது 25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே படம்
மின்னலே படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Feb 2026 14:20 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மின்னலே (Minnale Movie). ரொமாண்டிக் பாணியில் உருவாகி இருந்த இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் (Director Gautham Vasudev Menon) எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் (Actor Madhavan) நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அப்பாஸ், ரீமா சென், நாகேஷ், விவேக், கிட்டி, பாத்திமா பாபு, ராஜீவ் சௌத்ரி, ஜானகி சபேஷ், ஏ.சி.முரளி மோகன், ராஜி ஐயர், பாண்டி ரவி, மணீஷ் பொருண்டியா, கிருஷ்ணா, விதார்த், கௌதம் வாசுதேவ் மேனன், ஆர்.டி.ராஜசேகர், நாகேந்திர பிரசாத், ஷோபி, ஸ்ரீதர் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சீ (ஐ) டிவி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… அஞ்சல பாடலுக்கு கௌதம் மேனனுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூர்யா – வைரலாகும் வீடியோ

ரீ ரிலீஸாகிறது 25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே படம்:

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்த இந்த மின்னலே படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ரொமாண்டிக் படமான இந்த மின்னலே தற்போது காதலர் தினத்தை முன்னிடு மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் தற்போது உள்ள இளைஞர்களுக்கு 90களில் காதலித்தவர்களின் கதைகளை இந்தப் படம் நிச்சயமாக எடுத்துச்சொல்லும் என்றும் ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… ஜெயிலர் 2 படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்