Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வித் லவ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டன் சொன்ன விமர்சனம்

Actor Manikandan Review for With Love Movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். இவர் திரையரங்குகளில் வெளியாக உள்ள வித் லவ் படத்தைப் பார்த்துவிட்டு தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகின்றது.

வித் லவ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டன் சொன்ன விமர்சனம்
மணிகண்டன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Feb 2026 12:51 PM IST

தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக அறிமுகம் ஆன மணிகண்டன் பிறகு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு இவரது நடிப்பு திறமை காரணமாக படங்களில் நாயகனகா நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் கதைகள் எதார்த்தமாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை மையாக வைத்து வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் சொல்லப்படும் பாய் இன் நெக்ஸ்ட் டோர் என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமான நடிகராக இருக்கிறார் நடிகர் மணிகண்டன். இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாக உள்ளது குறித்தும் செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வித் லவ் படத்தின் பட விழாவில் நடிகர் மணிகண்டன் கலந்துகொண்டு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் மதன் எழுதி இயக்கி உள்ளார். வித் லவ் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ள நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.

வித் லவ் படத்திற்கு நடிகர் மணிகண்டன் கொடுத்த விமர்சனம்:

நான் இந்தத் திரைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன், அது எனக்கு ஒரு மூச்சடைக்க வைக்கும் அனுபவமாக இருந்தது. இதன் கதைக்களம் மிகவும் எளிமையானது, ஆனால் அது மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. அபிஷன் ஜீவிந்தின் நடிப்பு அற்புதமாக இருந்தது. நான் எதிர்காலத்திற்குப் பயணம் செய்து, இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்று சொல்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கட்டா குஸ்தி 2 படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு விஷாலுக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – என்ன காரணம் தெரியுமா?

நடிகர் மணிகண்டன் சொன்ன விசயம்:

Also Read… தூசி தட்டப்படும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம்… ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்