Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: வளரும் வயதில் என்னை ஊக்குவிக்க யாருமில்லை… சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு!

Samanthas Emotional Post At Presidents Event: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமன்ஹா ரூத் பிரபு. இவர் சமீபத்தில் குடியரசு தினத்தில் நடத்தப்பட்ட அட் ஹோம் என்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

Samantha: வளரும் வயதில் என்னை ஊக்குவிக்க யாருமில்லை… சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு!
சமந்தாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jan 2026 17:35 PM IST

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளில் பெரிதாக எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. அந்த விதத்தில் இவர் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் நிதிமோரு (Raj Nidimoru) என்பவரை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்துவந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 2025 ஆண்டு டிசம்பர் 1ம் தேதியில் திருமணம் செய்துகொண்டனர். இதை தொடர்ந்து தற்போது சமந்தா புது படத்திலும் நடித்துவருகிறார். ஹோ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டியின் (Nandhini Reddy) இயக்கத்தில், “மா இன்டி பங்காரம்” (Maa Inti Bangaram) என்ற புது படத்தில் சமந்தா ஆக்ஷன் நடிகையாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும். இந்நிலையில் சமீபத்தில் நடந்த குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு (President Draupadi Murmu) நடத்திய “அட் ஹோம்” (At Home) என்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியிக்கு பல்வேறு துறையிலிருந்து சில பிரபலங்களை மட்டுமே அழைக்கப்பட்டிருந்த நிலையில், சமந்தா ரூத் பிரபு கலந்துகொண்டிருந்தது. அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அது குறித்து சமந்தா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மாலை வரும் சர்ப்ரைஸ்… டி55 படம் குறித்து வெளியாகும் புதிய அப்டேட்

அட் ஹோம் நிகழ்ச்சி குறித்து சமந்தா ரூத் பிரபு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இந்த பதிவில் நடிகை சமந்தா ரூத் பிரபு,”வளரும் வயதிலிருந்து என்னை யாருமே ஊக்குவிக்கவில்லை. ஒரு நாளில் இப்படிப்பட்ட நிலையை அடைவேன் என எனக்குள்ளும் உள் குரலும் இல்லை, அதற்கான இந்த வரைபடமும் இல்லை. இது போன்ற கனவுகள் ஒரு காலத்தில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்குப் பெரிதாகத் தோன்றின.

இதையும் படிங்க: அந்த படம் சிம்பு கூட பண்ணமாட்டேனு சொல்லிட்டேன் – கே எஸ்.ரவிக்குமார் உடைத்த உண்மை!

அது போதும் என்று இருந்த ஒரு நாட்டில், நான் தொடர்ந்து தோன்றினேன்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவானது தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் அவரை பல்வேறு பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

மா இன்டி பங்காரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் :

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதில் சமந்தா ஆக்ஷன் காட்சிகளில் சண்டையிறுவதுபோன்றும் இடம்பெற்றிருந்த நிலையில், இப்படம் முழுக்க ஆக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ளது என தெரிகிறது. இந்த படமானது எப்போது வெளியாகும் என படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.