Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மாலை வரும் சர்ப்ரைஸ்… டி55 படம் குறித்து வெளியாகும் புதிய அப்டேட்

Dhanush 55 Movie Announcement Today: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாக உள்ள 55-வது படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மாலை வரும் சர்ப்ரைஸ்… டி55 படம் குறித்து வெளியாகும் புதிய அப்டேட்
தனுஷ் 55Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jan 2026 13:03 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் வரை பிரபல நடிகராக வலம் வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்துப் படங்கள் வெளியானது. அந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியும் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தேரே இஸ்க் மெய்ன் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர.

தனுஷின் நடிப்பில் 54-வது படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாக உள்ள 55-வது படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

டி55 பட குறித்து வெளியாகும் புதிய அப்டேட்:

இந்த நிலையில் நடிகர் தனுஷின் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்தப் படத்தை ஒண்ட்ர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இன்று 29-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு மாலை 5 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Abhishan Jeevinth: பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்… வெளிப்படையாக பேசிய டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்!

தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Bhagyashri Borse: அது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது – காந்தா பட நடிகை பேச்சு!