எதிர்பாராததை எதிர்பாருங்கள்… தொடர்ந்து ட்விஸ்ட்களை தரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!
Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 10-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடைப்பெற்று வருவது பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய காலத்தில் இருந்து தொடர்ந்து பல சீசன்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சில சீசன்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த கமல் ஏதேனும் தவறான முடிவை எடுத்தாலும் சரி தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதி தவறான முடிவை எடுத்தாலும் மக்கள் அவர்களை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி முந்தைய சீசன்களில் இருந்து பல மாறுபாடுகளுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் கடந்த வாரம் தொடங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பட்டனர். அதில் ப்ளாக் பாண்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வெளியே சென்றார். அதனைத் தொடர்ந்து காமென் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிவண்ணன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார்.
தொடர்ந்து ட்விஸ்ட்களை தரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி:
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கேப்டனாக இருந்த சாதிகாவின் கேப்டன்சியில் அதிருப்த்தி இருப்பதாக போட்டியாளர்கள் கூற அவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு வினோத் பாபு தற்போது கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களால் சரியான பங்களிப்பு இல்லை என்று போட்டியாளர் சாவின்யா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளுமே பார்வையாளர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக இருந்தது மட்டும் இன்றில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.




Also Read… முதல் பாகத்தை மிஞ்சியதா சர்தார் 2 படம்? எக்ஸ் விமர்சனம் இதோ!
மேலும் இன்று சனி மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதியுடனான எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. அதில் இந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற விசயங்கள் குறித்து அவர் போட்டியாளர்களிடையே பல கேள்விகளை எழுப்ப வாய்ப்பு உள்ளது என்று எதிர்பர்க்கப்படுகின்றது.
Also Read… பிக்பாஸில் கேப்டனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ