அன் ஆர்டினரி மேன் படத்தின் ஹையர் புரோமோ பாடல் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது
Higher Promo Song Crossed 5 Million Views | நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் அன் ஆர்டினரி மேன் படத்தில் இருந்து ஹையர் என்ற பாடலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி அதிகப் பார்வைகளைப் பெற்று உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதன்படி நடிகர் ரவி மோகன் தயாரித்து தற்போது இயக்கி வரும் படம் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் நடிகர் ரவி மோகன். மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்த அன் ஆர்டினரி மேன் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வியாழன் அன்று படத்தின் முதல் சிங்கிளான ஹையர் என்ற பாடலின் புரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹையர் புரோமோ பாடல் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது:
இந்தப் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட ஹையர் பாடல் புரோமோ வீடியோ தற்போது யூடியூபில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From terku merku to vadakilakku 🌪️
5M+ views on YouTube⚡https://t.co/bRKMLSxVbL@iam_RaviMohan @iYogiBabu @keneeshaa @YUNG_RAJA @ranjithkg @sherif_choreo @ProSrivenkatesh @Linqmarqet#AnOrdinaryMan #Higher #aom #Ohmykadavule pic.twitter.com/tZPUMB503x— Ravi Mohan Studios (@RaviMohanStudio) September 12, 2026
Also Read… திருமணம் செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் – நடிகை திவ்யா ஸ்பந்தனா!



