AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ் – இந்தி… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது – லிஸ்ட் இதோ

This Week Theatre Release List | இந்திய சினிமாவைப் பொருத்தவரை பல மொழிகளில் ஒவ்வொரு வாரம் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழ் – இந்தி… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது – லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2026 17:01 PM IST

என்ன விலை படம்: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் கருணாஸ் அவ்வபோது படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் என்ன விலை. இந்தப் படத்தை இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கி உள்ள நிலையில் இந்தப் படத்தில் நடிகர்கள் நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், சேத்தன் சீனு, மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், சுவாமிநாதன், நிழல்கள் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், விவியா சாந்த், தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், பாண்டி, ஷாஷா சிவகுமார் ஹீஷா, டிஎஸ்ஆர் சீனிவாசன் என பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் நாளை 17-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாரிஸ் கஃபே படம்: தமிழ் சினிமாவில் இயக்குநர் சரஜ் சீலன் எழுதி இயக்கி உள்ள படம் பாரிஸ் கஃபே. இந்தப் படத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி, நயனா சாய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் சைக்காலஜி ட்ராமா பாணியில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் வருகின்ற 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டாயிரா படம்: இயக்குநர் மேக்னா குல்சார் எழுதி இயக்கி உள்ள படம் டாயிரா. இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் நாயகனாக நடித்து உள்ளார். மேலும் இவருடன் இணைந்து நடிகர்கள் கரீனா கபூர், கன்வால்ஜித் சிங், அச்சிந்த் கவுர், அனுஜா சாத்தே, சீமா ஆஸ்மி, பிஸ்வபதி சர்க்கார், ஜிதேந்திர ஜோஷி, பிரகதி மிஸ்ரா, பிரம்மோத் சங்கி, மௌனிஸ் ரட்டா, சுமாலி கானிவாலே, உபேந்திர சௌஹான், க்ஷிதி ஜோக் த்ருப்தி கம்கர், சதீஷ் பாதல், அஷுதோஷ் பிஸ்ட் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களிடையே வலுக்கும் மோதல்… வைரலாகும் தகவல்!

சண்டக்காரி படம்: நடிகர் விமல் நாயகனாகவும் நடிகை ஷ்ரியா சரண் நாயகியாகவும் நடித்து உள்ள படம் சண்டக்காரி. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இயக்குநர் ஆர். மகேஷ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்தப் படம் தற்போது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம்? வைரலாகும் தகவல்

Follow Us