ராஜமௌலியுடன் வேலை செய்த எனது சக நடிகர்கள் என்னை பயமுறுத்தினார்கள் – மகேஷ் பாபு!
Mahesh Babu talks about SS Rajamouli | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கள்.
தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர் கட்டமனேனி கிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் நாயகனாகவு, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல சாதனைகளைப் படைத்தவர் கட்டமனேனி கிருஷ்ணா. இவ்வளவு பெரிய ஜாம்பவானின் மகனாக தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் மகேஷ் பாபு. வாரிசு நடிகராக இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான படங்கள் ஹிட் அடித்து வரும் நிலையில் அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றது.
அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு தற்போது வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த வாரணாசி படத்தினை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




ராஜமௌலியுடன் வேலை செய்த எனது சக நடிகர்கள் என்னை பயமுறுத்தினார்கள்:
தொடர்ந்து இந்த வாரணாசி படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்ஹில் வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் பணியாற்றிய எனது சக நடிகர்கள் என்னை பயமுறுத்தினார்கள். அவருடன் பணிபுரிவது மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள். உண்மையில் அவர்கள் என்னை மிகவும் பயமுறுத்திவிட்டார்கள். ஆனால், உண்மையைச் சொல்லப்போனால், அவரது படத்தில் பணியாற்றத் தொடங்கிய பிறகு, அந்த அனுபவம் மிகவும் எளிதாகவே இருந்தது என்று நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
Also Read… ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“My other actor friends who had worked with #SSRajamouli scared me. They told me, ‘Working with him is going to be very hard and very tough.’
They literally scared me. But, to be very honest, once I started working on his film, it has been very, very easy.”
– Superstar… pic.twitter.com/iYcM9gbKr6
— Filmyscoops (@Filmyscoopss) September 15, 2026
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!