ஒரு கத சொல்லட்டுமா… தங்களின் சொந்த வாழ்க்கை கதையை சொன்ன போட்டியாளர்கள் – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!
Bigg Boss 10: தமிழ் மொழியில் பிக் பாஸ் சீசன் 10ன் நிகழ்ச்சியானது சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இன்றுடன் 10வது நாளான நிலையில், போட்டியாளர்கள் தங்களின் கதையை சொல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் தங்களின் குடும்ப கதையை சொல்லும் புரோமோ வெளியாகியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg boss season 10) இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய முதல் நாளிலே மக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், கடந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பற்றிருந்தார். மேலும் இந்த வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை ஆனந்தி (Aanandhi) நுழைந்தார். இவர் நுழைந்த முதல் நாளிலே தீயை கொளுத்தி போட்ட மாதிரியாக சக போட்டியாளர்களிடையே சண்டையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இவர் வந்த நாளிலிருந்தே பிக் பாஸ் (Bigg Boss) வீட்டிலிருந்து பெரிய சண்டைகள் இருந்துவருகிறது.
இந்நிலையில் பிரியாவுக்கு ஆனந்திக்கும் சண்டை ஏற்பட்டுவரும் நிலையில், மேலும் மேலும் சூடு பிடிக்கிறது. அந்த விதத்தில் இன்றுடன் (16/09/2026) மொத்தம் 10 நாட்களான நிலையில், இன்று வெளியான 3வது ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்களின் சொந்த பிரச்சனைகளை பற்றி தெரிவித்துள்ளனர். இபோது தொடர்பான புரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: பிக்பாஸில் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது… தந்திரமாக ஆடும் பெண்கள் – வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10-வது நாளின் 3வது புரோமோ வீடியோ:
#Day10 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/cSxTVYDiRs
— Vijay Television (@vijaytelevision) September 16, 2026
இந்த பதிவில் அன்சர் தனது தனது விருதுகள், தான் தொகுப்பாளராக பணியாற்றிய விஷயங்கள் பன்றி பகிர்ந்துள்ளார். மேலும் அதை தொடர்ந்து சக போட்டியாளரான முத்தழகியும் தனது அம்மாவுக்கு கேன்சரால் ஏற்பட்ட பாதகிப்புகள் என தனது குடும்ப கதையை கூறியிருந்தனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில், பின் நடக்கவேண்டிய எல்லாமே முதல் வாரத்தில் நடக்க தொடங்கிவிட்டது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் – இயக்குநர் சீனு ராமசாமி
வாரத்திற்கு ஒரு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே உழைக்கிறார்கள் மேலும் 1 போட்டியாளர் வெளியேற்றப்பட்டுவருகிறார். அந்த விதத்தில் மற்ற பிக் பாஸ் சீசன்களை ஒப்பிடும்போது, பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் விமர்சனங்களும் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனில் எந்த போட்டியாளர் வெற்றிபெறுவார், யாருக்கு ஆதரவு அதிகம் என இன்னும் கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.