AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பேய்கள் வாழும் இடமா? சாபம் பெற்ற நகரமா? இதற்காகவே பயணம் செய்யும் புதிய டிரெண்ட்!

Lore Tripping: மர்மக் கதைகள், உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இடங்களைத் தேடிச் செல்வது ‘Lore Tripping’ என்ற புதிய பயணப் போக்காக உருவெடுத்துள்ளது. குறிப்பாக Gen Z பயணிகள் அதிகம் அறியப்படாத சிறிய நகரங்கள் மற்றும் வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களைத் தேடி வருகின்றனர்.

பேய்கள் வாழும் இடமா? சாபம் பெற்ற நகரமா? இதற்காகவே பயணம் செய்யும் புதிய டிரெண்ட்!
மாதிரி புகைப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Sep 2026 12:00 PM IST

‘Lore Tripping’ என்ற புதிய பயணப் போக்கு, சுற்றுலாத் தலங்களின் பின்னணியில் இருக்கும் மர்மம், வரலாறு மற்றும் உள்ளூர் கதைகளை அறிந்து கொள்வதை மையமாகக் கொண்டுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலங்களை மட்டும் தேர்வு செய்வதற்குப் பதிலாக, அதிகம் அறியப்படாத இடங்களைத் தேடி இளம் தலைமுறையினர் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். பேய்கள், சாபங்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் மர்மமான சம்பவங்கள் தொடர்பான கதைகள் இந்தப் பயணங்களில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற பல இடங்கள் உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் வரலாற்றுக் கதைகளுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. ஒரு இடத்தைப் பார்ப்பதைத் தாண்டி, அதன் பின்னணியில் இருக்கும் கதையை அனுபவிப்பதே இந்தப் பயண முறையின் முக்கிய அம்சமாக உள்ளது. குறிப்பாக Gen Z தலைமுறையினரிடம் சிறிய நகரங்கள் மற்றும் வழக்கமான சுற்றுலா பட்டியலில் இடம்பெறாத இடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

புதிய டிராவல் டிரெண்ட்

வழக்கமாக சுற்றுலா செல்லும்போது பிரபலமான இடங்கள், நினைவுச்சின்னங்கள், அழகிய கடற்கரைகள் உள்ளிட்டவற்றைத் தேடிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது குறிப்பாக இளம் தலைமுறையினரிடம், ஒரு இடத்தின் பின்னணியில் இருக்கும் உள்ளூர் கதைகள், புராணங்கள், மர்மங்கள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைத் தேடிச் செல்லும் புதிய பயண முறை பிரபலமாகி வருகிறது. இதற்கு ‘Lore Tripping’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கதைகளுக்காக பயணம்

‘Lore Tripping’ என்பது ஒரு சுற்றுலாத் தலத்தை அதன் புகழுக்காக மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக, அந்த இடத்துடன் தொடர்புடைய சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உள்ளூர் வரலாற்றை அனுபவிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக வழக்கமான சுற்றுலா பட்டியலில் இடம்பெறாத சிறிய நகரங்கள் மற்றும் அதிகம் அறியப்படாத இடங்கள் இத்தகைய பயணங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

Also Read: Home Tips: சுவர்களில் வரிசையாக வலம் வருகிறதா எறும்புகள்? தடுக்கும் எளிய முறைகள்!

மர்மங்களும் புராணங்களும்

பேய்கள் குறித்த கதைகள், சாபங்கள், மர்மமான சம்பவங்கள், பழமையான கட்டிடங்கள், உள்ளூர் நம்பிக்கைகள் போன்றவை இந்த வகை பயணங்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவிலும் பங்கார் கோட்டை, ஷனிவார் வாடா உள்ளிட்ட பல இடங்கள் வரலாறு மற்றும் மர்மக் கதைகளுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவற்றில் கூறப்படும் அமானுஷ்ய சம்பவங்கள் பெரும்பாலும் உள்ளூர் கதைகள் மற்றும் நம்பிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.

இளம் தலைமுறையின் புதிய விருப்பம்

சமீபத்திய Airbnb ஆய்வில், 2026 இலையுதிர்காலப் பயணங்களுக்கு அமெரிக்க Gen Z பயணிகளில் 90 சதவீதம் பேர் சிறிய நகரங்கள் மற்றும் அதிகம் அறியப்படாத இடங்களில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான உள்ளூர் கலாச்சாரம், வித்தியாசமான அனுபவங்கள் மற்றும் குறைந்த செலவு போன்ற காரணங்களும் இந்தப் பயண முறைக்கு வரவேற்பை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow Us