AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருட்களை உடனே மாற்றுவது அவசியம்!

Replace Regularly: வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் துண்டுகள், தலையணைகள், மெத்தைகள், குளியலறைத் திரைகள் போன்றவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது அவசியம். ஏசி வடிகட்டிகள், குடிநீர் வடிகட்டிகள், சமையலறை ஸ்பாஞ்ச் மற்றும் நான்-ஸ்டிக் பாத்திரங்களை முறையாகப் பராமரித்து, சேதமடைந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்.

அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருட்களை உடனே மாற்றுவது அவசியம்!
மாதிரி புகைப்படம் Image Source: magnific
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Nov 2026 12:30 PM IST

வீட்டைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது என்பது தினமும் தரையைத் துடைப்பது, பொருட்களை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்ல. வீட்டில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படும் சில (Household Items) அத்தியாவசியப் பொருட்களையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது அவசியம். இவற்றைச் சரியான நேரத்தில் மாற்றுவது வீட்டின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன், கிருமிகள் மற்றும் ஒவ்வாமை பாதிப்புகளையும் தவிர்க்க உதவும். இல்லையெனில், அவற்றில் கிருமிகள், தூசிகள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் துகள்கள் சேர்ந்து உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

Also Read: அடிக்கடி முகம் கழுவுகிறீர்களா? சருமத்திற்கு ஆபத்தாக முடியலாம்!

1. புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு கண்டறியும் கருவிகள்

வீட்டில் தீ விபத்து அல்லது ஆபத்தான வாயுக் கசிவு ஏற்படும்போது எச்சரிக்கை கொடுக்கும் புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு கண்டறியும் கருவிகளை 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். காலப்போக்கில் இவற்றின் உணர்திறன் குறையக்கூடும். எனவே, மாதந்தோறும் ஒருமுறை சோதனை செய்வதுடன், ஆண்டுதோறும் பேட்டரிகளையும் மாற்ற வேண்டும்.

2. குளியலறை திரை

குளியலறையில் பயன்படுத்தப்படும் திரைகளில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை மற்றும் கிருமிகள் வளர வாய்ப்புள்ளது. எனவே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவற்றைச் சுத்தம் செய்து, 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் தேவைக்கேற்ப புதிய திரையை மாற்றுவது நல்லது.

3. குளியல் துண்டுகள்

துண்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தி துவைப்பதால் அவற்றின் மென்மையும் தண்ணீரை உறிஞ்சும் தன்மையும் குறையலாம். குறிப்பாக, துவைத்த பிறகும் துர்நாற்றம் வீசுவது, கடினமாக மாறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் புதிய துண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். பொதுவாக 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது.

4. மெத்தை மற்றும் தலையணைகள்

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் மெத்தைகளில் தூசிப் பூச்சிகள், ஒவ்வாமையை ஏற்படுத்தும் துகள்கள் மற்றும் ஈரப்பதத்தால் பூஞ்சை உருவாகலாம். 7 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெத்தையை மாற்றுவது நல்லது. அதேபோல், வடிவம் மாறிய தலையணைகளை 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் மாற்ற வேண்டும்.

5. படுக்கை விரிப்புகள்

படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளில் வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிகள் போன்றவை சேரக்கூடும். படுக்கை விரிப்புகளை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் மாற்றுவது நல்லது. போர்வைகளின் தரம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் மாற்றலாம். தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது துவைப்பது அவசியம்.

6. ஏசி காற்று வடிகட்டிகள்

ஏசி மற்றும் காற்றோட்டக் கருவிகளில் உள்ள வடிகட்டிகளில் தூசி, ஒவ்வாமையை ஏற்படுத்தும் துகள்கள் சேரக்கூடும். எனவே, மாதந்தோறும் அவற்றைச் சோதித்து, பயன்பாடு மற்றும் உற்பத்தியாளர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவோ மாற்றவோ வேண்டும்.

7. குடிநீர் வடிகட்டிகள்

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் உள்ள வடிகட்டிகளை நீண்ட காலம் மாற்றாமல் பயன்படுத்தினால், அவற்றில் தாதுக்கள் மற்றும் மாசுக்கள் படியலாம். இதனால் குடிநீரின் தரமும் சுவையும் பாதிக்கப்படலாம். பொதுவாக 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் வடிகட்டிகளை மாற்றுவது நல்லது. தண்ணீர் வெளியேறும் வேகம் குறைந்தாலும் கவனம் செலுத்த வேண்டும்.

8. காய்கறி வெட்டும் பலகை மற்றும் சமையலறை ஸ்பாஞ்ச்

காய்கறி வெட்டும் பலகையில் கத்தியைப் பயன்படுத்துவதால் சிறிய பள்ளங்கள் உருவாகின்றன. அவற்றில் பாக்டீரியாக்கள் தங்கக்கூடும். எனவே, அதிகமான கீறல்கள் ஏற்பட்ட பலகைகளை மாற்ற வேண்டும். அதேபோல், பாத்திரம் தேய்க்கும் ஸ்பாஞ்சில் கிருமிகள் விரைவாகப் பெருகக்கூடும் என்பதால் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய ஸ்பாஞ்சைப் பயன்படுத்துவது நல்லது.

Also Read: அடிக்கடி முகம் கழுவுகிறீர்களா? சருமத்திற்கு ஆபத்தாக முடியலாம்!

9. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் தரை விரிப்பின் அடிப்பகுதி

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள மேற்பூச்சு சேதமடைந்தாலோ, கீறல்கள் ஏற்பட்டாலோ தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மாற்றுவது நல்லது. அதேபோல், தரை விரிப்புகளின் அடியில் வைக்கப்படும் வழுக்கல் தடுப்பு அடுக்குகள் காலப்போக்கில் சிதைந்து தரையையும் பாதிக்கலாம். அவற்றை 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்து மாற்ற வேண்டும்.

Follow Us