சிக்மா படதிலிருந்து யுவன் குரலில் வெளியானது அய்யயோ அம்மாடி பாடல்!
Ayyayo Ammaadi Song Lyrical Video From The Sigma Movie Out Now | நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் ஜேசன் சஞ்சய். அவரது தந்தை தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நாயகனாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தாலும் ஜேசன் சஞ்சய் தேர்ந்தெடுத்தது என்னவோ இயக்குநர் பணியைதான். அதன்படி தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தற்போது அறிமுகம் ஆகி உள்ள படம் சிக்மா. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள லைகா புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து உள்ளார். மேலும் லைகா புரடெக்ஷன் நிறுவனம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் தயாரித்த படம் தளபதி விஜயின் கத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்திற்கு தளபதி விஜயுடன் ஒரு எமோஷ்னல் கனெக்ஷன் உள்ள நிலையில் தற்போது அந்த நிறுவனமே ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை தயாரிக்கின்றது.
அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்திற்கு சிக்மா என்று பெயர் வைத்துள்ள நிலையில் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




சிக்மா படதிலிருந்து யுவன் குரலில் வெளியானது அய்யயோ அம்மாடி பாடல்:
அதன்படி இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில் சிக்மா படத்தில் இருந்து முன்னதாக பாடல் வெளியிட்டு இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் இருந்து இன்று இரண்டாவது பாடலான அய்யயோ அம்மாடி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி – வைரலாகும் பதிவு!
சிக்மா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Love finds its rhythm. ♥️ The second single #AyyayoAmmaadi / #OlammoVagalaadi from #SIGMA is out now. 🎶
Tamil 🔗 https://t.co/hdT9oIPG2e
Telugu 🔗 https://t.co/1nnXCCyisMSung by @thisisysr | @SanjanaKalmanje 🎤
Written by @Lyricist_Vivek | #KrishnaChaitanya ✍🏻@official_jsj… pic.twitter.com/I6v2jCnKs1— Lyca Productions (@LycaProductions) August 12, 2026
Also Read… அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் – நடிகர் சூர்யா ஓபன் டாக்