டிசி படத்தின் கதையை அருண் மாதேஸ்வரன் முதலில் யாருக்கு சொன்னார் தெரியுமா? வைரலாகும் தகவல்
Arun Matheswaran had initially narrated the story of DC to Vijay Deverakonda | தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் டிசி. இந்தப் படத்தின் கதை முன்னதாக தெலுங்கு சினிமா நடிகருக்கு கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் டிசி. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் முன்னதாக லோகேஷ் கனகராஜிற்கு முன்பு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தின் கதையை பிரபல தெலுங்கு சினிமா நடிகருக்கு விவரித்ததாகவும், அவருக்கும் இந்தப் படத்தின் கதை பிடித்து இருந்ததாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




டிசி பட கதையை இயக்குநர் முதலில் யாருக்கு சொன்னார் தெரியுமா?
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் முதலில் டிசி படத்தின் கதையை விஜய் தேவரகொண்டாவிடம் கூறினார். அவருக்கும் அத்திரைக்கதை பிடித்திருந்தது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன, ஆனால் காலப்போக்கில் படத்தின் நிலை நிச்சயமற்றதாக மாறியது. அந்தச் சூழலில், அருண் மாதேஸ்வரன் அதே கதையுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அணுகினார். இதில் லோகேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்தார். இதன் விளைவு டிசி இப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
Also Read… தள்ளிபோகிறதா அரசன் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #ArunMatheswaran had initially narrated the story of #DC to #VijayDeverakonda, who reportedly liked the script. Discussions were also underway to bring the project to life, but the film’s progress eventually became uncertain.
At that point, Arun Matheswaran approached… pic.twitter.com/0hVPEDcmOO
— Movie Tamil (@_MovieTamil) August 11, 2026
Also Read… கௌரி ஹெக்டேவாக தபு.. விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் பட புது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!