AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலை காதலிப்பவங்ககிட்ட சொல்றது அவ்வளவு ஈசியா என்ன? ஓடிடியில் வெளியாகியுள்ள இதயம் முரளி படம் எப்படி இருக்கு – விமர்சனம் இதோ!

Idhayam Murali Movie OTT Review Here | நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் இதயம் முரளி. இந்தப் அப்டம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

காதலை காதலிப்பவங்ககிட்ட சொல்றது அவ்வளவு ஈசியா என்ன? ஓடிடியில் வெளியாகியுள்ள இதயம் முரளி படம் எப்படி இருக்கு – விமர்சனம் இதோ!
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 19:57 PM IST

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் முதலாவதாக வெளியான பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நாயகன் என்றாலும் அவரது தம்பியாக நடித்த நடிகர் அதர்வாவை சுற்றிதான் இந்தப் படத்தின் கதையே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அதர்வா முரளி நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் இதயம் முரளி. இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு இரண்டு நாயகிகள் இருந்தார்கள் அதில் ஒன்று மீனாட்சி சௌத்ரி மற்றொருவர் கயாடு லோஹர். மற்றும் அதர்வாவின் நண்பர்களாக நடிகர்கள் ரக்‌ஷன், பரிதாபங்கள் சுதாகர், பரிதாபங்கள் ட்ராவிட் மற்றும் தமன் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் நடிகர் ஃபகத் பாசில் ஒரு நீண்ட கேமியோவிலும் நடிகை மாளவிகா மோகனன் சிறிய கேமியோ வேடத்திலும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதயம் முரளி படத்தின் கதை என்ன?

நடிகர் அதர்வா இதயா என்ற கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். இவர் சிறு வயதிலேயே பெற்றோர்கள் இழந்த நிலையில் தாய் மாமாவான நட்டிதான் அவரை குழந்தையில் இருந்து வளர்த்து வருகிறார். அதர்வாவிற்கு பள்ளி படிக்கும் போது இருந்தே ரக்‌ஷன், சுதகர், ட்ராவிட் மற்றும் தமன் நண்பர்களாக உள்ளனர். அப்படி இருக்கும் போது ஸ்கூல் படிக்கும் போது டென்னிஸ் மற்றும் டியூஷனில் இருக்கும் மீனாட்சி சௌத்ரி மீது அதர்வாவிற்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை கடைசி வரை அவரிடம் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்.

Also Read… விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை… சூப்பர் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரி… வதந்தி 2 வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

பிறகு கல்லூரி முடித்துவிட்டு வேலையில்லாம ஜாலியாக இருக்கும் போது மருத்துவம் படிக்கும் கயாடுவை சந்திக்க அவர் மீது காதல் ஏற்படுகின்றது. நண்பர்களாகி மிகவும் ஜாலியாக சுற்றித் திரிந்தாலும் அவரிடம் காதல் சொல்லும் அளவிற்கு தைரியம் இல்லாமல் அந்த காதலையும் சொல்லாமல் விடுகிறார். கயடு படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல அதுவும் முடிந்துவிடுகிறது.

பிறகு தமனின் திருமணத்தில் மீண்டும் மீனாட்சியை சந்திக்கும் அதர்வா அவர் மீது உள்ள அந்த காதல் தற்போது உள்ளது என்பதை உணர்ந்து அவரை மீண்டும் காதலிக்க தொடங்குகிறார். இந்த முறையாவது தனது காதலை அதர்வா வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி காணக் கிடைக்கின்றது.

Also Read… இந்த சிறுவன் யாருனு தெரியுதா? ரசிகர்கள் கொண்டாடும் ராக்ஸ்டார் இவர்.. அட இவர்தான்!

Follow Us